அம்மாவை அந்த மாமா பெட் ரூமில்...!! தந்தையிடம் போட்டுக் கொடுத்த 5 வயது சிறுவன்..!!

Published : Dec 04, 2019, 06:44 PM IST
அம்மாவை அந்த மாமா பெட் ரூமில்...!! தந்தையிடம் போட்டுக் கொடுத்த 5 வயது சிறுவன்..!!

சுருக்கம்

" எனக்கும்  சுமலதாவுக்கும்  நீண்ட நாட்களாக  உறவு  இருந்து வந்தது ,  இருவரும் அடிக்கடி தனிமையில்  உல்லாசம் அனுபவித்து வந்தோம்   திடீரென ஒருநாள் சுமலதா உறவை முறித்துக் கொள்வதாக கூறினார்.  

கர்நாடக மாநிலம்  சின்னயனாபால்யா கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தேவராஜ்,   இவருக்கு சுமலதா என்ற மனைவியும்  ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளான்.  இந்நிலையில் சுமலதா கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதைத் தொடர்ந்து  அவர் மாரடைப்பால் இறந்திருக்காலாம் என சந்தேகித்த அவரது உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்து சுமலதாவை அடக்கம் செய்துவிட்டனர்.   இந்நிலையில் சுமலதா இறந்து  இரண்டு மாதங்கள்  கழிந்து விட்ட நிலையில் அவர் மாரடைப்பால் மரணமடையவில்லை அவர்  கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. 

அதாவது சுமலதாவின் ஐந்து வயது மகன்,  தாய் இறந்தது குறித்து தந்தையிடம் தீடீரென்று கூறியுள்ளான், "அப்பா... வெங்கடேஷ் மாமா வீட்டுக்கு வந்தார் , அம்மாவை கீழே தள்ளினார்,  புடவையால் அம்மாவின் கழுத்தை நெரித்தார்,  அம்மா கீழே விழுந்து விட்டார்," என கூறியுள்ளான் அதேகேட்டு கேட்டு அதிர்ந்த தேவராஜ் மகனை கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார் .  அங்கேயும் குழந்தை மாறாமல் அதையே சொல்ல ,  அது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் , வெங்கடேஷ் என்பவரை கைது செய்து விசாரித்தனர் அதில் , சுமலதாவை தான் கொன்றதை அவர்  ஒப்புக்கொண்டார். பின் நடந்தவைகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக விவரிக்க ஆரம்பித்தார் வெங்கடேஷன்.  அதில்,  " எனக்கும்  சுமலதாவுக்கும்  நீண்ட நாட்களாக  உறவு  இருந்து வந்தது ,  இருவரும் அடிக்கடி தனிமையில்  உல்லாசம் அனுபவித்து வந்தோம்   திடீரென ஒருநாள் சுமலதா உறவை முறித்துக் கொள்வதாக கூறினார். 

அதற்கு  நான் ஒப்புக் கொள்ளவில்லை, சுமலதாவை பிரியவும் எனக்கு மனமில்லை, ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்,  அத்துடன் தன்னை விட்டு விலகாவிட்டால்  என்னையும் என வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டனார்.  அதில் கோபமடைந்த நான்  சுமலதா வீட்டில் தனியாக இருந்தபோது அவரை படுக்கை அறையில் தள்ளி புடவையால் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்"  என்றார் . அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்