பைக், ஸ்கூட்டர்களை தள்ளுபடியில் விற்றதால் ரூ.600 கோடி இழப்பு…பி.எஸ்.-3 தொழில்நுட்பத்துக்கு தடை எதிரொலி

 
Published : Apr 03, 2017, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பைக், ஸ்கூட்டர்களை தள்ளுபடியில் விற்றதால் ரூ.600 கோடி இழப்பு…பி.எஸ்.-3 தொழில்நுட்பத்துக்கு தடை எதிரொலி

சுருக்கம்

BS 3 Byke

பைக், ஸ்கூட்டர்களை தள்ளுபடியில் விற்றதால் ரூ.600 கோடி இழப்பு…பி.எஸ்.-3 தொழில்நுட்பத்துக்கு தடை எதிரொலி

பாரத் ஸ்டேஜ் -3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இம்மாதம் 1-ந்தேதியில் இருந்து விற்பனை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதத்தின் கடைசி 3 நாட்களில் தள்ளுபடி விலையில் பைக், ஸ்கூட்டர்களை நிறுவனங்கள் விற்பனை செய்ததால், ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ, யமாகா, எய்சர் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதலே பாரத் ஸ்டேஜ் -4 தொழில்நுட்பத்தை புகுத்தி விட்டதால் அந்த நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்ற தடையால் குறைவான அளவே பாதிப்பு ஏற்பட்டன. அதேபோல, ஹீரோ மோட்டார்ஸ், ஹோண்டா, டி.வி.எஸ். நிறுவனங்களும் நீதிமன்ற தடைக்கு முன்பே, பி.எஸ். 4 தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டதால் அந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை.

உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, ஏறக்குறைய 6.70 லட்சம் இரு சக்கர வாகனங்கள் தேக்கமடைந்து இருந்தன. இதன் மதிப்பு ரூ.3,800 கோடியாகும்.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் பி.எஸ்.3 தொழில்நுட்பத்தில் இரு சக்கர வாகனங்களை விற்க முடியாது என்பதால், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தள்ளுபடிகளையும், சலுகைகளையும், பரிசுகளையும் அறிவித்தன.

குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது. வாகனத்தில் ஒட்டுமொத்த மதிப்பில் 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடி வைத்து விற்பனை செய்யப்பட்டதால்தான், பெரும்பாலான வாகனங்களை விற்பனை செய்ய முடிந்தது.

இது குறித்து கிரிசில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ இரு சக்கர தயாரிப்பு நிறுவனங்கள் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு தள்ளுபடி கொடுத்ததால்தான், வாகனங்களை விற்பனை செய்ய முடிந்தது. ஏறக்குறைய ரூ.460 முதல் 480 கோடிக்கு வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. மற்றவை டீலர்களுக்குஇழப்பாக முடிந்தது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"