இமாச்சலப்பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து : 100 கிராமங்கள் துண்டிப்பு!

 
Published : Nov 15, 2016, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
இமாச்சலப்பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து : 100 கிராமங்கள் துண்டிப்பு!

சுருக்கம்

இமாச்சலப்பிரதேச மாநிலம் பெய்லியில் 30 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலம் திடீரென இடிந்து விழுந்ததால், சுமார் 100 பழங்குடியின கிராமங்கள் துண்டிக்‍கப்பட்டுள்ளன.

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா அருகே Tandi-யிலிருந்து Sansari செல்லும் சாலையில் பெய்லி என்ற இடத்தில் 30 மீட்டர் நீளம் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

20 ஆண்டுகளுக்‍கு முன்பு கட்டப்பட்ட பழமையான இந்தப் பாலத்தில், கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால், நூற்றுக்‍கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் துண்டிக்‍கப்பட்டுள்ளதால்,  அப்பகுதிகளுக்‍குச் செல்லும் கிராம மக்‍கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பாலத்தை மீண்டும் புதுப்பிக்‍க குறைந்தது 10 நாட்கள் ஆகும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!