
300 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிவே பிரம்மோஸ் ஏவுகணையை, இந்தியா இன்று விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒலியை விட அதிவேகமாகச் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அதன்படி, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஒடிசாவில் உள்ள சண்டிப்பூர் கடற்கரை ஏவுதளத்தலிருந்து இன்று காலை 11.33 மணிக்கு பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்யப்பட்டது.
இது 300 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடையதாகும். ஏற்கெனவே, பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய கப்பல்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், தரைப்படையின் மூன்று படைப்பிரிவுகளிலும் பிரம்மோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை திறன் மேம்படுத்தப்பட்டு தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை விமானப்படை மற்றும் நீர்மூழ்க்கிக் கப்பல் படைப் பிரிவுகளில் இணைப்பதற்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.