பிரம்மா குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகி மறைவு... ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம்..!

By vinoth kumarFirst Published Mar 27, 2020, 2:00 PM IST
Highlights

பிரம்மா குமாரிகள் இயக்கம் உலகம் முழுவதும் 4,500 கிளைகளை கொண்டுள்ளது. 147 நாடுகளில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக தாதி ஜானகி உள்ளார். 104 வயதான இவர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வந்தார். 

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி (104) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து,  ஊரடங்கு உத்தரவு அமலில்  உள்ளதால்  ஒரு மீட்டர் இடைவெளியில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் அமர்ந்து அவரது  உடலுக்கு தீ வைத்து தகனம் செய்தனர்.

பிரம்மா குமாரிகள் இயக்கம் உலகம் முழுவதும் 4,500 கிளைகளை கொண்டுள்ளது. 147 நாடுகளில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக தாதி ஜானகி உள்ளார். 104 வயதான இவர், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்,  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று 3-வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி (104) வயது மூப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனிடையே, ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் மத்திய அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் அமர்ந்து அவரது அவரது உடலுக்கு தீ வைத்து தகனம் செய்தனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

click me!