
கருப்பு பணத்தை மாற்றுவதற்காக பொதுமக்களுக்கு கமிஷன் கொடுத்து, சிலர் ஈடுபடுத்துகின்றனர். இவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என பொருளாதாரத்துறை செயலர் சக்திகாந்ததாஸ் கூறினார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
முதல் நாளில் பணத்தை மாற்றிய சிலர், பொதுமக்கள் போல மறுநாள் மீண்டும் வங்கியில் திரண்டு வருகின்றனர். இதனால், வங்கிகளில் எந்நேரமும் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள், தங்களது பதுக்கல் பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக, பொதுமக்களுக்கு கமிஷன் கொடுத்து, அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், வங்கியில் பணம் செலுத்துவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
இதேபோல் கோயில்களில் சேரும் பணம் 10, 20, 50, 100 ஆகியவை டெபாசிட் செய்யலாம். இதனை ஜந்தன் வங்கிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.