செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் கடும் தண்டனை : புதிய அவசரச் சட்டம் இன்று பிறப்பிப்பு?

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 10:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் கடும் தண்டனை : புதிய அவசரச் சட்டம் இன்று பிறப்பிப்பு?

சுருக்கம்

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ. 10 ஆயிரத்துக்கு அதிகமாக கையில் வைத்து இருந்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ, பெற்றாலோ அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம், தண்டனை விதிக்க அவசரச் சட்டத்தை மத்திய அரசு இன்று பிறப்பிக்கலாம் எனத் தெரிகிறது.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய இம்மாதம் 30-ந்ததேதி வரை அவகாசம் கொடுத்தது.

மத்தியஅரசின் காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், புதிய அவசரச் சட்டத்தை கொண்டு வர மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்கு பின், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் மக்கள் வைத்து இருந்தாலோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ அல்லது பெற்றாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

அதாவது, தனிநபர் ஒருவர் ரூ.500, ரூ.1000 நோட்டுகளா அதிகபட்சமாக 10 எண்ணிக்கையில் மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்மதிப்பு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.   

ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருப்பு என்ன வைத்து இருக்கிறார்களோ அந்த தொகையின் 5 மடங்கு தொகையை அபராதமாக விதிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், இனி செல்லாத ரூபாய் நோட்டுகளை ஆய்வுப்பணிக்கோ, அல்லது பழைய ரூபாய் சேகரிப்பு என்ற ஆய்வுக்கோ மட்டமே கையில் வைத்து இருக்க அனுமதிக்கப்படுவார்கள். இதை மறைமுகமாக பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.

அதேசமயம், ரிசர்வ் வங்கியின் கிளைகளில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்யவும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.ஆனால், டெபாசிட் செய்யப்படும்போது, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு போதுமான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

வங்கிகளில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்யும் காலக்கெடுவும் வெள்ளிக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது. அதற்கான அவசரச்சட்டம் இன்று நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு பிறப்பிக்கப்படலாம் எனத்தெரிகிறது. அதன்பின்,ஜனவரி மாதம் நடக்கும் கூட்டத்தொடரில் இதற்கான அவசரச்சட்டத்துக்கான ஒப்புதல் பெறப்படும்.

இது குறித்து மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகையில், “ ெசல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருப்பது சட்டவிரோதம், தண்டணைக்குரியது. அபராதமும் விதிக்கப்படும். யாரையும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது. செல்லாத ரூபாய் மூலம் ஊதியமும் வழங்கக்கூடாது. இதேபோல கடந்த 1978ம் ஆண்டு, ரூ.1000, ரூ.5000, ரூ.10000 நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கும் போது அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ரிசர்வ் வங்கியில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை செல்லாத ரூபாய்களை மாற்றிக்கொள்வதில் மாற்றம் ஏதும் இருக்காது” என தெரிவிக்கின்றன

PREV
click me!

Recommended Stories

டேட்டிங் ஆப்பில் காதல்.. ஒருநாள் முழுக்க ஹோட்டலில் ஜாலி.. காலையில் காத்திருந்த ஷாக்
Anant Ambani Birthday: மார்க் சக்கர்பெர்க்கையே மிரள வைத்த அனந்த் அம்பானியின் 5 காஸ்ட்லி ஹாபிஸ்!