முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் பாஜக இன்னும் வலுவான நிலையில் இருக்கும் என அவரது மகன் விஜயேந்திரா கூறுகிறார்.
கர்நாடகா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக கர்நாடக துணைத் தலைவர் பி. ஒய். விஜயேந்திரா, தனது தந்தை பி.எஸ். எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்திருந்தால் கட்சி நல்ல நிலைக்கு வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
“எடியூரப்பா ஜி முதல்வராகத் தொடர்ந்திருந்தால், ஒருவேளை பாஜக சிறந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. புதிய தலைமுறை தலைவர்களுக்கு இடம் கொடுப்பதற்காக எடியூரப்பாவே பதவி விலக முடிவு செய்தார். கட்சியின் நலன் கருதி அவரே இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதைப் பிரச்சினையாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது” என விஜயேந்திரா கூறியுள்ளார்.
தெற்கு ஆசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ.! மாஸ் காட்டிய பிரதமர் மோடி! இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?
வருங்கால முதல்வர்?
பல தேர்தல் பிரச்சாரங்களில் விஜயேந்திராவை அடுத்த முதல்வர் என்று கட்சித் தொண்டர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு மக்களின் அங்கீகாரம் தேவை என விஜயேந்திரா கூறினார். “நான் எங்கு சென்றாலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்படி ஆரவாரம் செய்வது பற்றி நான் வெட்கப்படவில்லை. ஆனால் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பாஜக ஒரு தேசிய கட்சி. இறுதியில், உயர்மட்ட தலைமைதான் முடிவு எடுக்கும். அதே சமயம் கர்நாடக மக்கள் உங்களை தலைவராக ஏற்க வேண்டும். ஒரு தலைவர் பதவியின் தகுதியால் உருவாகமாட்டார், மக்கள் ஏற்றுக்கொள்வதால்தான் உருவாகிறார். அதை நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவுக்கு எதிராக வருணா தொகுதியில் களமிறக்குவது குறித்து பற்றி கட்சித் தலைமை ஆலோசித்தது. கணிசமான லிங்காயத் வாக்குகளை கொண்ட வருணா தொகுதி விஜயேந்திரா சித்தராமையாவைத் தோற்கடிக்க சரியான இடமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் பி.எஸ். எடியூரப்பா தலையிட்டு தனது மகன் ஷிகாரிபுராவில் வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்தார். அதுபற்றி பேசிய விஜயேந்திரா, சித்தராமையாவின் கோட்டையில் தனக்கு இருக்கும் ஆதரவைச் சுட்டிக்காட்டினார்.
முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்.. இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்
சித்தராமையாவுக்கு எதிராக
“வருணா தொகுதி மக்கள் இன்றும் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். ஷிகாரிபுராவில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்ட பிறகு, எனது முதல் வருகை வருணாவுக்குதான். எடியூரப்பாவின் மகன் என்பதைத் தவிர கர்நாடகம் முழுவதும் நான் அங்கீகரிக்கப்பட்டேன் என்றால், அதற்குக் காரணம் வருணாவைச் சேர்ந்த தொண்டர்களின் பங்களிப்புதான், அவர்கள் இவ்வளவு அன்பும் பாசமும் காட்டுகிறார்கள். ஆனால் இறுதியில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டியிருக்கிறது” என விஜயேந்திரா விளக்கினார்.
விலகிய தலைவர்கள்
லிங்காயத் தலைவர்களை பாஜக ஓரங்கட்டுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டும் நிலையில், காங்கிரஸில் இணைந்த முன்னாள் பாஜக தலைவர்களான லக்ஷ்மண் சவடி மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரை விஜயேந்திரா கடுமையாக விமர்சித்தார்.
“பாஜக தொண்டர்களின் கட்சி. ஒரு சில தலைவர்களைச் சார்ந்து இல்லை. அவர்கள் விலகியதால் கட்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. லட்சுமண சவடிக்கும், ஜெகதீஷ் ஷெட்டருக்கும் கட்சி எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கட்சி கடினமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கட்சியின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவு அது. வீரசைவ லிங்காயத் சமூகத்தை பாஜக எப்படி நடத்தியது என்பது அவர்களுக்கே தெரியும். அந்தச் சமூகத்தில் இருந்து மூன்று முதல்வர்களை பாஜக அளித்துள்ளது. தற்போதைய முதல்வர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்” என விஜயேந்திரா குறிப்பிட்டார்.
அதிகளவில் நன்கொடை பெற்ற பி.ஆர்.எஸ் கட்சி.. திமுக & அதிமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
அமித் ஷா வருகை
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா எடியூரப்பா இல்லத்துக்கு வருகை தந்ததைப் பற்றிப் பேசிய விஜயேந்திரா, அது தனது கனவு நனவான தருணம் எனக் கூறியுள்ளார்.
“அமித் ஷா எடியூரப்பா இருவரும் பரஸ்பரம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ராஜினாமா செய்த பிறகும், கர்நாடகாவில் கட்சிக்காக 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்துவரும் உயர்ந்த தலைவர் எடியூரப்பா. இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. கனவு நனவாகும் தருணம். நான் அமித் ஷாவைத் தீவிரமாகப் பின்பற்றுபவன். அவர் கர்நாடக சூழலைப் பற்றி விவாதித்தார். அவர் கர்நாடகத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்கிறார்” என்கிறார் விஜயேந்திரா.
Karnataka Elections 2023: லோக் ஆயுக்தா ரெய்டு... வீட்டு வாசலில் அழுது புரண்டு நாடகமாடிய அதிகாரி!