டெல்லியில் பாஜக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது: ஜே.பி. நட்டா தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை

By SG BalanFirst Published Jan 16, 2023, 12:17 PM IST
Highlights

இரண்டு நாட்கள் நடைபெறும் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் இன்றும் நாளையும் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. முதல் கட்டமாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றும் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே. பி. நட்டா, துணைத் தலைவர் வசுந்தரா ராஜே, ராமன் சிங், ராம் மோகன் சிங், சதான் சிங், தேசியப் பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இதற்குப் பின் நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோருடன் மூத்த பாஜக தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

Explained: நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் நடப்பது ஏன்?

பாஜகவின் இந்தக் கூட்டங்களில் அரசியல், பொருளாதார சூழல் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், எதிர்வரும் ஒன்பது மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் பொதுத்தேர்தல் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடுஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படேல் சதுக்கத்தில் தொடங்கி நாடாளுமன்ற கட்டிடம் வரை இந்தப் பேரணி நடக்கும்.

டெல்லியில் நடக்கும் பாஜக செயற்குழுக் கூட்டத்தை ஒட்டி பிரதமர் மோடியின் முக்கியத் திட்டங்கள் பற்றிய கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக பொதுச்செயலாளர் வினோத் தவாடே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று பிரதமர் மோடியின் ரோடு ஷோ: போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

click me!