பாஜகவின் அடுத்த குறி சோனியாவின் குடும்பத்திற்கு... அலறும் காங்கிரஸ்..!

By vinoth kumarFirst Published Sep 5, 2019, 1:15 PM IST
Highlights

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு பாஜக குறிவைத்துள்ளது. 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு பாஜக குறிவைத்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்ற பின்னர், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து, கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.  

அதேபோல், கர்நாடகாவில் பாஜக பல்வேறு வகையில் சவாலாக விளங்கி வரும் முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை அமலாக்கத் துறை நேற்று முன்தினம் தட்டி தூக்கியது. அதேபோல், மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத்தின் மூத்த சகோதரியின் மகன் ரதுல் புரி, 354 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாஜகவின் அடுத்த குறி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு பாஜக குறிவைத்துள்ளது. இவர் மீதான நில மோசடி வழக்கை துரிதப்படுத்த சிபிஐ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், காங்கிரஸ் வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது. ‘பொருளாதார மந்தநிலை உட்பட பாஜக அரசின் தோல்விகள் குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

click me!