கடன்களுக்கான வட்டியை நினைச்சு பயந்திட்டிருக்கீங்களா ? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க !! ரிசர்வ் வங்கி அதிரடி !

By Selvanayagam PFirst Published Sep 5, 2019, 7:27 AM IST
Highlights

அனைத்து வங்கிகளும் தற்போது உள்ள வீட்டு கடன், தனிநபர் கடன் மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் மூலம் வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்காக வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. ஆனால் வங்கிகள் மதை முறையாக செயல்படுத்தவில்லை.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அதிரயாக உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்ப்க ரிசர்வ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகிறது. 

அதன்படி குறைக்கப்பட்ட வட்டி விகிதம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பல்வேறு காரணங்களால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைப்பதில் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை.

எனவே வங்கிகள் தற்போது உள்ள வீட்டு கடன், தனிநபர் கடன் மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  
கடன்களு,ககான வட்டி வீதத்தை நினைத்து கலங்கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியில் இந்த அறிவிப்பால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

click me!