இளம் பெண்ணை கற்பழித்த பா .ஜ .க எம்.எல்.ஏ! வேலைகாரரின் மகளிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்த கொடுமை...

 
Published : May 30, 2018, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
இளம் பெண்ணை கற்பழித்த பா .ஜ .க எம்.எல்.ஏ! வேலைகாரரின் மகளிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்த கொடுமை...

சுருக்கம்

Woman accuses BJP MLA Kushagra Sagar of raping her

கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலமுறை உல்லாசம் அனுபத்து வந்ததாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவர் கும்பலால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளானார்.  இது தொடர்பாக . பங்கார்மாவ் தொகுதி  ஆளும் கட்சி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் மற்றொரு எம். எல்.ஏ. மீதும் பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்டு உள்ளது. தனது வீட்டில் வேலை தோட்டத்தில் வேலைப் பார்க்கும்,  வேலைகாரரின் மகளை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவர்  பலமுறை உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளார். இதனையடுத்து பதயுன் மாவட்டத்தில் உள்ள பிஸ்ஸாவுலி தொகுதி எம்.எல் ஏ குஷாகரா சாகர் மீது பாதிக்கப்பட்ட பெண்  புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து பேசிய அந்தப் பெண், நான் சமுதாயத்தில் கேலிக்குரிய ஒரு விஷயமாகிவிட்டேன், எனக்கு தினம் தினம் அச்சுறுத்தல் வருகிறது. எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.  மேலும் பேசிய அந்த பெண் கூறும் போது  சாகரின் தந்தை முன்னாள் எம்.எல்.ஏ  யோகேந்திர சாகர்  தனது மகனை எனக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். பின்னர்  இந்த விஷயத்தை இதோடு முடித்துகொள் என கூறி எனக்கு ரூ. 20 லட்சம் தருவதாக கூறி உள்ளார். என அந்தப் பெண் கூறி அழுதார் உள்ளார்.

அதுமட்டுமல்ல, என்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என கூறினார். இந்நிலையில், எம்.எல்.ஏ சாகருக்கு  ஜூன் 17 ந்தேதி திருமணம் நடைபெறப்போவதாக அறிந்தபோது அந்த பெண்  புகார் அளித்து உள்ளார் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!
பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை