பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்கு இரையாகும் பாஜக தலைவர்கள்... மாவட்ட தலைவர் பலி..!

Published : Aug 10, 2020, 10:32 AM IST
பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்கு இரையாகும் பாஜக தலைவர்கள்... மாவட்ட தலைவர் பலி..!

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழந்தார்.  

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழந்தார்.

ஜம்மு - காஷ்மீரில் புத்காம் மாவட்ட பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான முன்னணி தலைவராக இருந்தவர் அப்துல் ஹமீது நஜார். காலையில் நடைபயிற்சி சென்ற இவர் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த நஜார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலனின்றி அவர் உயிரிழந்தார். அண்மை காலமாக காஷ்மீரில் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது.

 

கடந்த 6-ம் தேதி பா.ஜ.க. பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது கான்டே என்பவர் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். கடந்த ஜூலை மாதம் பா.ஜ.க.வின் முன்னாள் பந்திபோரா தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 3 பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் அவர்கள் 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில் மற்றொரு பா.ஜ.க. மாவட்ட தலைவர் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!