"டெல்லி வெற்றி" மோடிக்கு கிடைத்த வெற்றி பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம்

 
Published : Apr 26, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
"டெல்லி வெற்றி" மோடிக்கு கிடைத்த வெற்றி பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம்

சுருக்கம்

bjp leader Shah is proud of delhi success

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதியஜனதா கட்சிக்கு கிடைத்து வெற்றி என்பது, மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பாரதியஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பெருமிதம் கொண்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் கூறுகையில், “ டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி எப்போதும் கிடைக்காத, எதிர்பாராத வெற்றியாகும். டெல்லி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

டெல்லி மக்கள் எதிர்மறை அரசியலையும், அரசியலில் சாக்குபோக்கு சொல்பவர்களையும் நிராகரித்து இருக்கிறார்கள். மோடியின் வெற்றி ரதம் முன்னேறிச்செல்லும். மோடியின் தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். கடந்த 3 ஆண்டுகளாக மோடியின் சிறப்பாக நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே, கடந்த 5 மாநிலத் தேர்தல் வெற்றியும், டெல்லி மாநகராட்சி வெற்றியும் அமைந்துள்ளது. டெல்லி மாநில பொறுப்பாளர் மனோஜ் திவாரிக்கு பாராட்டுக்கள்’’ எனத் தெரிவித்தார்.

டெல்லி மக்களுக்கு நன்றி

பிரதமர் மோடி டுவிட்டரில் வௌியிட்ட செய்தியில், “ பாரதியஜனதா கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த டெல்லி மக்களுக்கு நன்றி. தேர்தலில் கடினமாக பணியாற்றி வெற்றியை பெற்றுக்கொடுத்த பா.ஜனதா உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள்’’ எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!