தமிழக மீனவர்களுக்காக முதல் முறையாக வாய் திறந்த மோடி - ரணிலிடம் கண்டிப்பு

First Published Apr 26, 2017, 5:47 PM IST
Highlights
Modi speaks for the first time for Tamil fishermen to wickremesinghe


எல்லை தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணிலை மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு வரும் மே மாதம் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ளார்.

இதனிடையே ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 5 நாள் அரசு முறைப்பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று டெல்லி வந்தார்.

இதையடுத்து இன்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர், எல்லை தாண்டும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணிலை மோடி வலியுறுத்தியுள்ளார்.

எந்த நிலையிலும் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தகூடாது என தெரிவித்துள்ளார்.  

click me!