Bjp Leader Murder : சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையன்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் நாராயண்பூர் மாவட்ட பிரிவு துணைத் தலைவரான ரத்தன் துபே, நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜரகாதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுஷல்நகர் கிராமத்தில் உள்ள சந்தையில், நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹேம்சாகர் சித்தார் தெரிவித்தார்.
"இந்த கொலை குறித்து தகவலறிந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. பின்னர் அவரது உடல் நாராயண்பூர் நகருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த படுபாதக செயலை செய்த அடையாளம் தெரியாத ஆசாமிகளை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்," என்றும் ஹேம்சாகர் மேலும் கூறினார்.
மனைவிக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம்; விசாரணைக்கு பயந்து பொறியாளர் தற்கொலை
கொல்லப்பட்ட துபே, நாராயண்பூர் ஜில்லா பஞ்சாயத்து மற்றும் மாவட்டத்தின் மால் வாகன் பரிவாஹன் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சாட்சியி அளித்த தகவலின்ன்படி, துபே மக்கள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்து இரண்டு நபர்கள் வெளியே வந்து அவரை பின்னால் இருந்து அவரது தலையில் தாக்கியுள்ளனர்.
"பதறிய துபே, தனது காரை நோக்கி ஓடி, உள்ளே செல்ல முயன்றார், ஆனால் இன்னும் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு கூரிய முனைகள் கொண்ட ஆயுதங்களால் அவரைத் தாக்கினர், இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பாஜகவினர் சுமார் 5 மணியளவில் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்" என்றும் அவர் கூறினார்.
நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் புஷ்கர் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த வழக்கில் துபேயின் வருகை குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்.. வெறி தீராததால் 3 துண்டுகளாக வெட்டி படுகொலை..!
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக தலைவர் ஓம் மாத்தூர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "சத்தீஸ்கர் பாஜகவின் நாராயண்பூர் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளரும், நாராயண்பூர் மாவட்ட துணைத் தலைவருமான ரத்தன் துபே ஜி பிரசாரத்தின் போது மாவோயிஸ்டுகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்தக் கோழைத்தனத்தை ஒட்டுமொத்தக் கட்சியும் கண்டிக்கிறது. அம்மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு மாவோயிஸ்டுகள் அழிந்துவிடுவோம் என்ற பயத்தில் மாவோயிஸ்டுகள் இதுபோன்ற செயல்களைச் செய்வதாகக் கூறினார்.
"சத்தீஸ்கரில் இருந்து காங்கிரஸ் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளது. எனவே, வன்முறையை ஊக்குவிப்பதன் மூலம் அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கும் பொறுப்பை மாவோயிஸ்டுகளிடம் மறைமுகமாக ஒப்படைத்துள்ளது" என்று சாவ் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக தலைவர் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுவது இது ஆறாவது முறையாகும் என்றார் அவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D