கண்மூடித்தனமாக தாக்குதல்... பாஜக எம்.எல்.ஏ. அதிரடி கைது..!

Published : Jun 26, 2019, 05:54 PM IST
கண்மூடித்தனமாக தாக்குதல்... பாஜக எம்.எல்.ஏ. அதிரடி கைது..!

சுருக்கம்

மத்தியபிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மத்தியபிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய் வர்க்கியாவின் மகன், ஆகாஷ் விஜய் வர்க்கியா. இந்தூர் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான இவர், மாநகராட்சி அதிகாரி ஒருவரை, கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சி அதிகாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்த போது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த எம்.எல்.ஏ ஆகாஷ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் பேட்டால் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியானது. 

அதில் பொதுமக்கள் கூட்டத்தின் நடுவே, செய்தியாளர்கள் படம்பிடித்துக் கொண்டிருக்கும் போதே பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ், அதிகாரியை விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்க்கியா போலீசார் கைது செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!
பூமியின் எந்த மூலையிலும் இணையம்.. LVM3 ராக்கெட்டில் இமாலய சாதனை படைத்த இஸ்ரோ