பெண்ணுக்கு பாலியல் தொல்லை... ஃபேஸ்புக்கில் வீடியோ... கல்லடா டிராவல்ஸை எதிர்பார்க்காதீங்க..!

By vinoth kumarFirst Published Jun 26, 2019, 1:14 PM IST
Highlights

ஒடும் பேருந்தில் உறக்கத்தில் இருந்த பெண்ணிடம் சில்மிஷம், பயணிகள் மீது தாக்குதல் உள்ளிட்ட 17 புகாரை அடுத்து கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸ் அனுமதி ஓராண்டுக்கு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடும் பேருந்தில் உறக்கத்தில் இருந்த பெண்ணிடம் சில்மிஷம், பயணிகள் மீது தாக்குதல் உள்ளிட்ட 17 புகாரை அடுத்து கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸ் அனுமதி ஓராண்டுக்கு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற கல்லடா டிராவல்ஸ் பேருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கல்லடா டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஏசி பேருந்து புறப்பட்டது. ஹரிபாட் என்ற இடத்தில் பேருந்து சென்றிருக்கொண்டிருந்த திடீரென பிரேக் டவுன் ஆனது. இதனால் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.

 

அப்போது, சில பயணிகள் மாற்று ஏற்பாடு கேட்டு ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனிடையே, பேருந்து கேரளாவில் விட்டிலா பகுதியை சென்ற போது, திடீரென ஆம்னி பேருந்து ஊழியர்கள் சிலர் உள்ளே ஏறி, ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை, அங்கிருந்த மற்றொரு பயணி வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, வீடியோ வைரலாகவே, பேருந்து நிறுவனத்திடம் இருந்து வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதற்குள், இந்த விஷயம் பெரிதாகவே, காவல் துறையினர் பயணிகளை தாக்கிய ஊழியர்களை கைது செய்தனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸின் அனுமதி அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அனுமதி ரத்து ஒருவருடத்திற்கு பொருந்தும் என்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடும் பேருந்தில் உறக்கத்தில் இருந்த பெண் பயணினிடம் ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை கல்லடா டிராவல்ஸ் மீது 17 புகார்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!