Memories Never Die.. அய்யா அப்துல் கலாம் குறித்த புத்த வெளியீட்டு விழா - பங்கேற்று சிறப்புரையாற்றிய அமித் ஷா!

By Ansgar R  |  First Published Jul 29, 2023, 5:24 PM IST

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதுமான தனது பாதயாத்திரையை துவங்கி உள்ளார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை.


நேற்று ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு மாபெரும் திடலில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் தலைமையில் இந்த பாதயாத்திரைக்கான துவக்க விழா நடைபெற்றது. மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்று, பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனையை எடுத்துரைக்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று கூறினார். 

Latest Videos

மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தில் உள்ள ஊழலை ஒழிக்கவும், வாரிசு அரசியலை ஒழிக்கவும் இந்த பாதயாதிரையை திரு. அண்ணாமலை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சியினரையும் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும் கடுமையாக சாடிய அமித் ஷா, மோடி அவர்கள் நாட்டிற்கு செய்துள்ள பல நல்ல திட்டங்கள் குறித்து பேசினார். 

இராமேஸ்வரத்தில் நடைபெற்ற "டாக்டர்.ஏ பிஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை"புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய போது.https://t.co/EKsEYEMyi1

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்விலும் உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடைய எட்டாம் ஆண்டு நினைவாக, இந்தியாவின் 11வது ஜனாதிபதியான அவரின் நினைவாக புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. 

"டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மெமரிஸ் நெவர் டை" என்ற தலைப்பில் அந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கே.அண்ணாமலை மற்றும் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரம்.. பிரபல எழுத்தாளர் அதிரடி கைது - அப்படி என்ன தான் பேசினார் பத்ரி சேஷாத்ரி?

click me!