ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ.1000 கோடி பேரம்... நடுங்கித் தவிக்கும் ஆளும் கட்சி..!

Published : Jul 09, 2019, 06:54 PM IST
ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ.1000 கோடி பேரம்... நடுங்கித் தவிக்கும் ஆளும் கட்சி..!

சுருக்கம்

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக 1000 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு வருவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக 1000 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு வருவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. 

தங்களது அதிகார ட்விட்டர் பக்கத்தில் இந்தக் குற்றச்சட்டை அக்கட்சி முன் வைத்துள்ளது. இந்த தொகையில் 10 சதவிகிதம் கூட மிசோராம், மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஆண்டு பட்ஜெட் ஒதுக்குவதில்லை. எங்கிருந்து, எப்படி இந்தப்பணம் மோடி அமித் ஷாவுக்கு வந்தது? ஊழல் செய்யாமல் இது முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

 

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏகளின், எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, மூவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி ஆட்சியில் இருந்து விலகியுள்ள, எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஏற்கனவே சட்டசபையில் எண்ணிக்கை பலத்தை இழந்து விட்டது கூட்டணி அரசு. இருப்பினும், இவர்கள் யாருடைய ராஜினாமா முடிவையும் இதுவரை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை என்பதால், ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்னும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!