2024 தேர்தலை இலக்காக வைத்து மீண்டும் இந்து முஸ்லீம் பிரச்சனையை தூண்ட பாஜக சதி.. அலறும் கி.வீரமணி.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2022, 8:21 PM IST
Highlights

2024 ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து மீண்டும் இந்து முஸ்லிம் பிரச்சினை கையில் எடுத்துள்ளது அதன் முன்னோட்டமாக தான் பழமையான மசூதிகளை அகழாய்வு செய்து இந்து மத அடையாளங்களை எடுப்போம் என்ற பெயரில் புறப்பட்டுள்ளனர் என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எச்சரித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து மீண்டும் இந்து முஸ்லிம் பிரச்சினை கையில் எடுத்துள்ளது அதன் முன்னோட்டமாக தான் பழமையான மசூதிகளை அகழாய்வு செய்து இந்து மத அடையாளங்களை எடுப்போம் என்ற பெயரில் புறப்பட்டுள்ளனர் என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுதலை நாளேட்டில் எழுதியுள்ள தலையங்கம் பின்வருமாறு:- 

இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலங்களை தோண்டி அங்கே இந்து அடையாளம் இருக்கிறதா என்பதை பார்ப்பது தொடர் நடவடிக்கையாகவே மாறிவிட்டது, ஜனவரி முதல் மார்ச் வரை உத்திரபிரதேச தேர்தலை கருத்தில் கொண்டு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் உள்ளது எனக் கூறி இந்து அமைப்புகள் பெரும் போராட்டம் நடத்தின, அங்கு சென்று வழிபடவும், தொடர் பூஜைகள் நடத்தவும், தொடர்ந்து தேதிகள் அறிவித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தினர்,

இதையும் படியுங்கள்: முதலமைச்சரை பார்த்தும் திருப்தி இல்ல... அண்ணாமலையை ஆபீசுக்கே போய் பார்த்த ஸ்ரீமதி அம்மா செல்வி..

இந்த நிலையில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் வழக்கு தொடுத்தன,ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடர்ந்து விசாரிக்க படாமல் நிலுவையில் இருக்கும்போது இஸ்லாமிய வழிபாட்டு தளத்திற்கு சென்று வழிபட்டு பூஜை செய்ய அங்கு சிவலிங்கம் உள்ளதா என்று ஆய்வு செய்ய நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது அவர்களும் அகழாய்வு நடத்தலாம் என்று உத்தரவிட்டனர், இதனைத் தொடர்ந்து அந்த ஆய்வு நடந்து கொண்டிருக்கும் போதே மசூதிக்குள் சிவலிங்கம் உள்ளது என்று பாஜக ஆதரவு வட இந்திய செய்தி தொலைக்காட்சிகள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வட இந்தியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அகழாய்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன் என்று தெரியவில்லை,

இதையும் படியுங்கள்: ரேஷன் கடையில் இனி கூகுள் பே, பேடிஎம் வசதி.. மாவட்டத்திற்கு 10 மாதிரி கடை.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்

இந்நிலையில் மீண்டும் பதற்றத்தை தூண்டும் விதமாக மதுராவில் உள்ள மிகவும் பழமையான ஷாஹி ஈத்கா மசூதியை அகழாய்வு செய்ய அலகாபாத் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வட இந்தியாவில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இதுபோன்ற வழக்குகளை இந்து அமைப்புகள் தொடர்கின்றன, சமூக அக்கறை கொண்ட விசாரணை அமைப்புகள் இதன் உள்நோக்கத்தை உண்மையை தன்மையை கருதி முடிவெடுக்க வேண்டும், ஆனால் சமூகப் பதற்றத்தை தூண்டும் வகையில் செயல்படுபவர் களுக்கு ஆதரவாகவே எல்லாம் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கற்பிக்கும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி மதுரா நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை கடந்த மே மாதம் மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, அதேபோல் சில ஹிந்து அமைப்புகளால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன, மதுரைவில் மறைக்கப்பட்டுள்ள இந்து மதம் தொடர்பான தொல்பொருட்கள் பழங்கால கல்வெட்டுகள் உள்ளிட்டவை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார், இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் ஞானவாபி மசூதியை போலவே ஷாஹி ஈத்காவில் கள ஆய்வு செய்து செய்யா உத்தரவிட்டது. ஆய்வு தொடர்பான அறிக்கையை நான்கு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வட இந்தியாவில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது,

உத்தரப்பிரதேசத்தில் ரதயாத்திரை நடத்திய அத்வானி, ராமர் கோயில் மட்டுமல்ல எங்கள் இலக்கு, ஞானவாபி மசூதி, ஷாஹி ஈத்கா உள்ளிட்ட பழமையான அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும் இந்துக் கோயில்கள் தான் என்பதை நிரூபிக்கும் வரை எங்கள் பயணம் நிற்காது என்று கூறியிருந்தார், அதன் பிறகு நடந்த கலவரங்கள், உயிரிழப்புகள், இதன் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம் போன்றவைகளை உலகமே பார்த்து வேதனைப்பட்டது. அந்த கலவரங்களால் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியா தொடர்ந்து அனைத்து வளர்ச்சியிலும் பின்னடைவை சந்தித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலனுக்கு எதிராக பிஜேபி தனது அரசியல் நடவடிக்கைகளை மடைமாற்றும் வகையில் மீண்டும் இந்து முஸ்லிம் பிரச்சினை கையில் எடுத்துள்ளது. அதன் முன்னோட்டமாகத்தான் பழமையான மோசடிகளை அகழாய்வு செய்து இந்து மத அடையாளங்களை எடுப்போம் என்ற பெயரில் தற்போது புறப்பட்டுள்ளனர். மக்களிடத்தில் மதவாத தீ பிடிக்காமல் இருக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்குவதுதான் நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும், அப்படி இருப்பதாகவே தெரியவில்லையே.? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!