
லக்னோ, நவம்பர் 23: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2024-ல் பாஜக கூட்டணி பெற்ற வெற்றிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கமான 'எக்ஸ்'-ல் பதிவிட்டுள்ள அவர், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2024-ல் பாஜக கூட்டணிக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பாதுகாப்பு, வளமை மற்றும் நல்லாட்சிக்கு மக்களின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பாஜகவின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
BJP Maharashtra: முதல்வராகிறாரா தேவேந்திர பட்னவிஸ்? மகாராஷ்டிராவில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன?