சுத்தம், சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மன் கி பாத் ஊக்குவித்தது என்று பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார் பில் கேட்ஸ்.
வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.100 கோடிக்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை கேட்டுள்ளனர். 23 கோடிப்பேர் வழக்கமாக மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்கின்றனர். இந்த எண்ணிக்கை 41 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் இமேஜ் உயர்ந்துள்ளது. அவரது அறிவாற்றலை, உணர்வுப் பூர்வமான மக்கள் தொடர்பை, வலிமையான தலைமையை, எளிமையான அணுகுமுறையை, நேரடியாக குடிமக்களுடன் உரையாடும் பண்பை பார்வையாளர்கள் விரும்புகின்றனர்.மன் கி பாத் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் 60 சதவீதம்பேர் நாட்டுக்காக உழைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 59 சதவீதம் பேர் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக உள்ளனர். 58 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கை தரம் உயர்ந்திருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
Mann ki Baat has catalyzed community led action on sanitation, health, women’s economic empowerment and other issues linked to the Sustainable Development Goals. Congratulations on the 100th episode. https://t.co/yg1Di2srjE
— Bill Gates (@BillGates)அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுத்தம், சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மன் கி பாத் ஊக்குவித்தது” என்று பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார் பில் கேட்ஸ்.
இதையும் படிங்க..மெரினாவில் பேனா நினைவு சின்னம்: சட்ட போராட்டத்தை அறிவித்த சீமான்.. அதிர்ச்சியில் திமுக.!!