என்னய விட்றாதிங்க..! பயணிகளிடம் கெஞ்சிய திருடன் ! பீகாரில் ஓடும் ரயிலில் 10கி.மீ ஜன்னலில் தொங்கி பயணம்

By Pothy Raj  |  First Published Sep 16, 2022, 12:01 PM IST

பீகாரில் ரயிலில் மொபைல் போனை திருட முயன்றபோது பயணிகளிடம்  திருடன் ஒருவர் வசமாகக் சிக்கிக்கொண்டார். ஆனால், அவரின் கெட்டநேரமோதெரியவில்லை,  திருடனின் கை மட்டும் பயணிகளிடம் சிக்கிக்கொண்டது. 


பீகாரில் ரயிலில் மொபைல் போனை திருட முயன்றபோது பயணிகளிடம்  திருடன் ஒருவர் வசமாகக் சிக்கிக்கொண்டார். ஆனால், அவரின் கெட்டநேரமோதெரியவில்லை,  திருடனின் கை மட்டும் பயணிகளிடம் சிக்கிக்கொண்டது. 

அந்த நேரத்தில் ரயிலும் புறப்பட்டுவிட்டது. என்னை விட்டுறாதிங்க, கையை விட்டால் செத்துருவேன் என்று அழுதுகொண்டே,  10கி.மீ தொலைவுக்கு திருடன்  ரயிலில் தொங்கியபடியே பயணித்தது காமெடியாக இருந்தது.

Tap to resize

Latest Videos

கொல்லத்தில் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு கேட்ட நன்கொடை கொடுக்காததால் கடைக்காரரை தாக்கியதால் பரபரப்பு!!

பீகாரின் பெகுசாரியிலிருந்து, காகாரியாவுக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது, சாஹேப்பூர் கமல் ரயில்நிலையத்தில் ரயில் சிலநிமிடங்கள் நின்றது. அப்போது, பயணிகளின் உடமைகளை நோட்டமிட்டபடியே ஒரு திருடன் வலம் வந்தான். ரயில் புறப்பட்டவுடன் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணியிடம் இருந்து செல்போனை பறிக்க அந்தத் திருடன் முயன்றான்.

ஆனால், துரதிர்ஷ்டமாக செல்போனைப் பறிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது, திருடனின் கையிலும் ரயில் ஜன்னலில் சிக்கிக்கொண்டது, கையை எடுக்க முடியவில்லை. 

அந்த நேரத்தில் ரயிலும் வேகமாக நகரத் தொடங்கியது. இதைப் பார்த்த ரயில் பயணிகள் ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்ட திருடனின் கையை பிடித்துக்கொண்டனர்.

ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்... தேர்தல் ஆணையருக்கு அதிகாரிகள் குழு கடிதம்!!

செல்போனை திருடவந்து பயணிகளிடம் சிக்கிக்கொண்டுவிட்டோமோ என்ற பீதியும், பயணிகள் கையைவிட்டால் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துவிடுவோமே என்ற உயிர்பயமும் திருடனுக்கு ஏற்பட்டது.

 

Though yet chilling. A mobile snatcher caught in a moving train when his failed attempt probably led to his worst day of life. The thief was hung by a window in a moving train from Begusarai to Khagaria. The passengers handed him over to GRP. IS this act justified? pic.twitter.com/o3ja5qWggi

— Kumar Saurabh Singh Rathore (@JournoKSSR)

ஒரு கட்டத்தில் ரயில் பயணிகள் திருடனின் கையை விட்டுவிடலாம் என்றபோது, கையை வி்ட்ராதிங்க, காப்பாத்துங்க என்று பயணிகளிடம் திருடன் கதறத் தொடங்கினார். ஏறக்குறைய 10 கி.மீ தொலைவுக்கு ரயில் ஜன்னலில் தொங்கியபடியேதிருடன் பயணித்தார்.

காகரியா ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் உடனடியாக இறங்கி திருடனைப் பிடித்து, நன்றாகக் கவனித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும்… ஷாங்காய் மாநாடு குறித்து பிரதமர் மோடி கருத்து!

கடந்த ஜூன் மாதம் இதுபோன்ற சம்பவம் நடந்தது. ஆனால், அதில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்தார். நவாடா ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸாக இருக்கும் ஆர்த்தி குமாரி பணியில் இருந்தார். ரயில் புறப்பட்ட நேரத்தில் வாசலில் நின்று செல்போனை ஆர்த்தி குமாரி பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அதை நோட்டமிட்ட திருடன் பெண் போலீஸ் கையில்இருந்த செல்போனை பறிக்க முயன்றான். அதை எதி்ர்த்துபோராடிய போது, திருடனின் கை போலீஸிடம் சிக்கியது. ஆனால், ரயில்வேகமாக நகர்வதை கவனித்த திருடன், பெண் போலீஸை கீழே இழுத்துப்போட்டுவிட்டு தப்பித்தான். இதில் பெண் போலீஸ் ஆர்த்தி குமாரி காயமடைந்தார்.

click me!