சாக்லேட் சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் துடிதுடித்து உயரிழந்ததால் பரபரப்பு..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 04, 2022, 12:28 PM IST
சாக்லேட் சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் துடிதுடித்து உயரிழந்ததால் பரபரப்பு..!

சுருக்கம்

மளிகை கடை உரிமையாளர் தான் தனது மகனை விஷம் கலந்த சாக்லேட் கொடுத்து கொன்று விட்டார் என புகார் அளித்து இருக்கிறார். 

பீகார் மாநிலத்தின் போஜ்புர் மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் சாக்லேட் சாப்பிட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவம் போஜ்புர் மாவட்டத்தின் உத்வாந்த்நகர் போவஸ் ஸ்டேஷனின் எல்லைக்கு உட்பட்ட சோனாபுரா கிராமத்தில் அரங்கேறி இருக்கிறது. 

உயிரிழந்த மாணவர் சுபம் குமார் ஷா என முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. உயிரிழந்த பள்ளி மாணவர் சுபம் குமார் ஷாவின் தந்தை சந்தோஷ் ஷா தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடை உரிமையாளர் தான் தனது மகனை விஷம் கலந்த சாக்லேட் கொடுத்து கொன்று விட்டார் என புகார் அளித்து இருக்கிறார். 

உயிரிழந்த சிறுவன் கடந்த வியழன் கிழமை மாலை வேளையில் மற்ற சிறுவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு மளிகை கடை நடத்தி வந்த பெண் ஒருவர் சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்தார். சிறுவன் சாக்லேட் சாப்பிட்டு முடித்து விளையாடி கொண்டு இருந்தான். திடீரென சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து சிறுவனை மருத்துவமனை அழைத்து சென்றனர். 

உயிரிழப்பு:

எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டான். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முன்னதாக சுபம் மற்றும் மளிகை கடை நடத்தி வந்த பெண் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து பழி வாங்கும் நோக்கில், மளிகை கடை நடத்தி வந்த பெண் சிறுவனை விஷம் கலந்த சாக்லேட் கொடுத்து கொலை செய்து விட்டதாக சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, காவல் துறை அதிகாரிகள் சதார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த சிறுவன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிறுவன் உயிரிழப்புக்கு விஷம் கலந்த சாக்லேட் சாப்பிட்டது தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. 

திட்டமிட்ட கொலை:

“எனது மகன் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது மளிகை கடை நடத்தி வரும் பெண் எனது மகனுக்கு சாக்லேட் கொடுத்து இருக்கிறார். சாக்லேட் சாப்பிட்டதும், மகனின் உடல்நிலை பாதிக்கப்பட துவங்கியது. பின் அவனை நாங்கள் சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டான்.” 

“மளிகை கடை நடத்தி வரும் பெண்ணுக்கும் எனது மகன் சுபம் குமார் ஷா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதை மனதில் வைத்து, பழிவாங்கும் நோக்கில் அந்த பெண் விஷம் கலந்த சாக்லேட்டை கொடுத்து என் மகனை கொலை செய்து இருக்கலாம். சுபம் உடல்நிலை மோசமானதை அடுதக்து, உடனடியாக அந்த பெண்ணின் மளிகை கடைக்கு விரைந்து சென்றேன், ஆனால் அவர் கடையை சாத்திவிட்டு, வீட்டினுள் மறைந்து கொண்டார். மகனின் உயிரை காப்பாற்றுவது முக்கியம் என்பதால், அந்த சமயத்தில் நான் மருத்துவமனைக்கு விரைந்து செல்வதில் கவனமாக இருந்தேன்,” என்று உயிரிழந்த சுபம் குமார் ஷாவின் தந்தை சந்தோஷ் ஷா காவல் துறையினரிடம் தெரிவித்து இருக்கிறார். 

விசாரணை:

“நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இருக்கிறோம். இந்த வழக்கு தொடர் விசாரணைக்காக உத்வந்த் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது,” என வழக்கை விசாரணை செய்து வரும் காவல் துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!