உ.பி. வன்முறை - வீடியோ ஆதாராங்களுடன் 36 பேரை தட்டுத் தூக்கிய போலீஸ்...!

By Kevin KaarkiFirst Published Jun 4, 2022, 10:52 AM IST
Highlights

முகம்மது நபி குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. 

உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தொடர்புடைய 36 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பா.ஜ.க. செய்தி தொடர்பாளரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்க இருந்த இடத்தில் வன்முறை ஏற்பட்டது.

பா.ஜ.க. கட்சி செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா சமீபத்திய தொலைகாட்சி விவாதத்தின் போது, ஞானவாபி விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது முகம்மது நபி குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. 

ஊர்வலம்:

அதன்படி கான்பூரில் நேற்று தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பிய இஸ்லாமியர்கள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி தொழுகை முடித்து வெளியே வரும் போது கோஷங்களை எழுப்பிய படி வீதிகளில் ஊர்வலம் நடத்தினர். அப்போது சந்தையில் திறக்கப்பட்டு இருந்த கடைகளை மூட அவர்கள் வலியுறுத்தினர். 

இவர்களது செயலை பார்த்துக் கொண்டு இருந்த மற்றொரு கும்பல் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இரு கும்பலிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் தாக்குதலில் முடிந்தது. இரு கும்பலை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இரு கும்பலிடையே ஏற்பட்ட மோதலின் போது, அதே இடத்தில் எட்டு முதல் பத்து காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

வன்முறை:

மோதல் ஏற்படுவதை கவனித்த போலீசார் உடனே தலையிட்டு மோதலை தடுக்க முயன்றனர். இது மட்டும் இன்றி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும் வன்முறை குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து மூத்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் அந்த பகுதியில் ஏற்பட்ட வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

வன்முறை தொடர்பாக பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் அந்த பகுதியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

உடனடி நடவடிக்கை:

“சுமார் 50 முதல் 100 பேர் திடீரென வீதிகளில் இறங்கி கோஷம் எழுப்பத் துவங்கி விட்டனர். மற்றொரு கம்பல் இவர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சம்பவம் கல்வீச்சில் நிறைவு பெற்றது. சுமார் எட்டு முதல் பத்து காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் ஓரளவு வன்முறையை கட்டுப்படுத்தினர். உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் நானும், சில மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு பத்து நிமிடங்களில் விரைந்து சென்றோம்,” என காவல் துறை ஆணையர் விஜய் சிங் மீனா தெரிவித்தார். 

click me!