மூளைக்காய்ச்சலுக்கு கொத்து கொத்தாக மடியும் குழந்தைகள்... பலி எண்ணிக்கை 145-ஆக உயர்வு...!

By vinoth kumarFirst Published Jun 23, 2019, 11:46 AM IST
Highlights

பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த கடந்த 2 வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உடனே 100 கோடி ஒதுக்க வேண்டும் என துணைமுதல்வர் சுஷில்குமார் மோடி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த கடந்த 2 வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உடனே 100 கோடி ஒதுக்க வேண்டும் என துணைமுதல்வர் சுஷில்குமார் மோடி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

பீகாரில் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர், பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவமனையில் 398 பேரும், கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் 154 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 145 குழந்தைகள் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சலால் பீகாரில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு மூளைக்காய்ச்சல் நோயால் ஏராளமான குழந்தைகள் இறந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கபீல்கான் தற்போது ஜாமீனில் வெளியே வந்து மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.  

இதனிடையே, மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளுக்கு நாள் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!