
பீகார் மாநிலத்தின் 192-சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் கடும் இழுபறிக்குப் பின்னர் வெளியாகியுள்ளன. அனைத்து 28 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில், இத்தொகுதியின் வெற்றி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராதா சரண் சா வெற்றி பெற்றுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) வேட்பாளர் தீபு சிங் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ராதா சரண் சா மொத்தம் 80 ஆயிரத்து 598 வாக்குகள் பெற்றார். 43.99% வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் தீபு சிங் மொத்தம் 80,571 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர் பெற்ற வாக்குகள் 43.97%.
இருவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 0.02 சதவீதம் மட்டுமே. இதன்படி, ராதா சரண் சா வெறும் 27 வாக்குகள் என்ற மிகச் சிறிய வித்தியாசத்தில் வெற்றியை தன்வசமாக்கி இருக்கிறார்.
0.02% சதவீதம் வாக்கு வித்தியாசம் இந்த சந்தேஷ் தொகுதியின் வெற்றியை மாற்றி அமைத்துள்ளது.