Bengaluru Water Shortage : பெங்களூருவில் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு, இவ்வாண்டு தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகின்றது. இதை சமாளிக்க கர்நாடக அரசு போராடி வருகின்றது.
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் தண்ணீரை தேவையற்ற விஷயங்களுக்காக பயன்படுத்த கூடாது என்றும், அப்படி தண்ணீரை வீணடித்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி சில குடியிருப்பு வாசிகள் தண்ணீரை வீணாக செலவளித்துள்ளனர்.
கார்களை கழுவுதல், தோட்டம் அமைக்க தண்ணீர் போன்ற தேவையற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மாநிலத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறியதற்காக ஒவ்வொரு குடும்பமும் ரூபாய் 5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Loksabha election 2024 பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய்: யார் இவர்?
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து சுமார் 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது, தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ. 80,000 வசூலிக்கப்பட்டது என்ற அறிக்கையை இப்பொது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில், BWSSB, பெங்களூரில் நிலவும் தண்ணீர் நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தால் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
ஹோலி கொண்டாட்டங்களின் போது, BWSSB குடிமக்கள் காவிரி மற்றும் போர்வெல் தண்ணீரை நீச்சல் குள விருந்துகள் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை ஊக்குவித்து நீர் நுகர்வு குறைக்க ஏரேட்டர்களை நிறுவுகிறது.
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கான பெங்களூரு நாளொன்றுக்கு 2,600 எம்எல்டி தண்ணீர் தேவைக்கு எதிராக சுமார் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் தெரிவித்தார். மொத்தத் தேவையில் 1,470 எம்எல்டி தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்தும், 650 எம்எல்டி நீர் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் பெறப்படுகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.