பெங்களூரை வெளுத்து வாங்கிய கனமழை... இருவர் உயிரிழப்பு...!

By Kevin KaarkiFirst Published May 18, 2022, 11:26 AM IST
Highlights

பணியாளர்கள் அப்போது சைட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். திடீர் மழை காரணமாக தண்ணீர் அளவு அதிகரித்தது.

தென்மேற்கு பருவமழை காரணமாக பெங்களூரில் பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் சார்பில் பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழை காரணமாக உல்லல் உபநகர் பகுதியில் பணியாற்றி வந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் பீகார் மாநிலமும் மற்றொரு நபர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரின் சடலங்களும் பைப்லைன் போடும் பணி நடந்து கொண்டு இருந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இருவர் உயிரிழப்பு:

“உயிரிழந்தது பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவ்பாரத் மற்றும் உத்தரி பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்கித் குமார் என தெரியவந்துள்ளது. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் பலத்த மழை பெய்தது. பணியாளர்கள் அப்போது சைட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். திடீர் மழை காரணமாக தண்ணீர் அளவு அதிகரித்தது. அங்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தினமும் ஆய்வு செய்து வருகிறோம்,” என போலீஸ் அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 

நேற்று மாலை தொடங்கி இரவு முழுக்க பெய்த பலத்த மழை காரணமாக நகரில் 155 மில்லிமீட்டர் அளவில் பதிவானது என தகவல் வெளியாகி உள்ளது. பலத்த மழையை தொடர்ந்து வெளியான வீடியோக்களில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பது, வாகனங்கள் மற்றும் மக்கள் அதில் ஊர்ந்து செல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது. 
 
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை:

“பயணம் செய்ய எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் தொடர்ந்து நீடித்து வருகிறது,” என வங்கி ஊழியரான கிரேஸ் டிசோசா தெரிவித்தார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கே.ஆர். புரம் அண்டர்பாஸ் பாதையை பயன்படுத்தி வருகிறார்.

மின்னல் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால், மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டன. பலத்த மழை காரணமாக பெங்களூரு நகரின் ஜெ.பி. நகர், ஜெயாநகர், லால்பாக், சிக்பெட், மஜெஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யெஷ்வந்த்புர், எம்.ஜி. ரோடு, கப்பன் பார்க், விஜயாநகர், ராஜராஜேஷ்வரி நகர், கெங்கேரி, மகடி ரோடு, மைசூரு ரோடு மற்றும் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

click me!