பெங்களூரு.. கழிவறையில் கூட தண்ணீர் இல்லை - மால்களை நோக்கி படையெடுக்கும் குடியிருப்பு வாசிகள்!

By Ansgar R  |  First Published Mar 8, 2024, 10:28 PM IST

Bengaluru Water Shortage : பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடியிருப்புவாசிகள், பள்ளிகள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.


"பிரெஸ்டீஜ் பால்கன் சிட்டியில் உள்ள எங்கள் குடியிருப்பில் தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் சப்ளை செய்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. தற்போது மக்கள் வசிக்கத் தகுதியில்லாத அளவுக்கு நிலைமை உள்ளது. பகலில் தண்ணீர் இல்லை. இரவில் நேரங்களில் வரும் சேற்றுத் தண்ணீர் குளிப்பதற்குத் தகுதியற்றது" என்று இணையவாசி ஒருவர் கூறியுள்ளார். 

"கழிப்பறையில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. சில நேரங்களில் குடியிருப்பாளர்கள் வரிசையாக தங்கள் கழிவுகளை வெளியேற்ற பல நேரங்களில் அருகிலுள்ள உள்ள மாலுக்கு செல்வதைப் பார்ப்பது தற்போது சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது என்று இணைய வாசிகள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன் விருது வென்ற இந்தியா!

ஈரமான துடைப்பான்களை பயன்படுத்த குடியிருப்பாளர்கள் சங்கம் பரிந்துரைத்து வருகின்றது. ஏற்கனவே வீட்டுக் கடன்களைக் கையாளும் குடியிருப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த வாழ்க்கை நிலைமைகளுடன் போராடுவதால் நிதி அழுத்தம் அதிகரிக்கிறது. டேங்கர் தண்ணீரை மட்டுமே நம்பியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை இது பெரிய அளவில் பாதிக்கிறது. 

"சிலர் ஜிம்மிற்குச் செல்லும்போது, அங்கேயே குளித்துவிட்டு வருவதற்கு ஒரு ஜோடி உடைகள் மற்றும் டவலை எடுத்துக்கொள்கிறார்கள். பெங்களூரில் நிரந்தரமாக டேங்கர் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ள பிளாட்களை வாங்காதீர்கள், இப்படி கஷ்டப்படுவதை விட, மன நிம்மதியுடன் வாடகை வீட்டில் வாழ்வதே மேல்," என சில இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். 

காவிரிப் படுகையில் நிலத்தடி நீர்மட்டமும், வறட்சியும் காரணமாக பெங்களூரு தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதன் விளைவாக, டேங்கர் விலை உயர்ந்துள்ளது, அரசும் இதில் தலையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக BBMP மண்டலங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், தண்ணீர் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும், போர்வெல்களிலிருந்து தண்ணீர் டேங்கர் விநியோகம் அனைத்தையும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் அறிவித்தார்.

பாஜக ஆட்சியை இழக்கும்: திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் நம்பிக்கை!

click me!