
பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடை அறிவிப்பை வௌியிடும் முன்பே, புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருந்தன என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் ஊழல், கருப்புபணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்களில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நடவடிக்கையால் மக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகி, 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.கள் ரிசர்வ் வங்கி கவனர் நேரில் விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி அளித்த விளக்கத்தில், 171.65 கோடி எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுகளும், 6 ஆயிரத்து 858 கோடி எண்ணிக்ைகயில் ரூ. ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 15.44 லட்சம் கோடியாகும் எனத் தெரிவித்தது.
இநநிலையில், மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நேற்று கவர்னர் உர்ஜித் படேல் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன்பே புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்தன. ரூபாய் நோட்டு தடை குறித்த அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததால், ரிசர்வ் வங்கிக்கும், அரசுக்கும் இடையிலான ஆலோசனைகள் குறித்த எந்த விவரமும் ஆவணங்களாக இல்லை.
அதே சமயம், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் காகிம், மை, போக்குவரத்து விசயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட விசயங்கள் குறித்து அடிக்கடி அரசுடன் ஆலோசனை செய்துள்ளோம். தகவல்களையும் பரிமாறியுள்ளோம்.
ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பு வௌியாகும் முன், அனைத்து விதமான காரணிகளையும் ஆய்வு செய்து, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அறிவிப்புவௌியாகும் போது போதுமான அளவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பில் இருந்தன.
அதேசமயம், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் இது தொடர்பாக எந்தவிதமான ஆலோசனையும் நடத்தவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.