அயோத்தி ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி X (முன்னாள் ட்விட்டர்) என்ற ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதில், “அயோத்தியில் ராம்லாலாவுக்கு கும்பாபிஷேகம் நடைபெற இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி.
அயோத்தியில் ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன். அனைத்து…
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த பிரதிஷ்டையின் போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன். அனைத்து மக்களிடமும் ஆசிர்வாதம் தேடுகிறேன். இந்த நேரத்தில், என் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம்” என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..