மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பிஷ்ணுபூரின் அகாசோய் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர், விறகு சேகரிக்க அருகிலுள்ள காட்டிற்குச் சென்றதாக அந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் சுராசந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள மலைப்பகுதியில் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பிஷ்ணுபூரின் அகாசோய் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர், விறகு சேகரிக்க அருகிலுள்ள காட்டிற்குச் சென்றதாக அந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
undefined
சந்தேகத்திற்கிடமான கிளர்ச்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட நால்வரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. நான்கு பேரும் நேற்று காணாமல் போனதாக குடும்பத்தினரால் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்! இஸ்ரோவின் அடுத்த சாதனை!
பிஷ்ணுபூரின் கும்பி பகுதியில் உள்ள போலீசார் வனப்பகுதிக்குள் சென்று இன்று உடல்களை மீட்டதாகத் தெரிகிறது. கடத்திச் சென்றவர்களைப் பிடிக்க அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை விறகு சேகரிக்கச் சென்ற நான்கு பேரும் இரு மாவட்டங்களையும் பிரிக்கும் தடுப்பு மண்டலப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரக் கணிப்புகள் சொல்கின்றன. இதனிடையே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள், ஆயுதம் ஏந்திய சிலர், போர் உடையுடன் கொலைகளுக்குப் பொறுப்பேற்பதைக் காட்டுகின்றன.
கடந்த 2023 மே மாதத்தில் இருந்து எட்டு மாதங்களாக மணிப்பூரில் நடந்துவரும் இன மோதல்கள் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. தீவைப்புச் சம்பவங்களில் ஏராளமான வீடுகள் நாசமாகியுள்ளன.
உ.பி.யில் ஸ்டேட் வங்கிக்குள் புகுந்து அலப்பறை செய்த காளை மாடு!