பியூட்டி பார்லர் சென்ற பெண்... கொத்து கொத்தாக கொட்டிய முடி: என்ன நடந்தது?

By Manikanda Prabu  |  First Published Aug 6, 2023, 3:36 PM IST

பியூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டிய சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது


மாடலாக வேண்டும் என்ற கணவரின் ஆசையை நிறைவேற்ற முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அழகு நிலையமே கொடுங்கனவாக மாறிப்போயுள்ளது. அண்மையில்க் நடைபெற்ற இந்த சம்பவம் அழகு சேவைகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் விருப்பப்படி மாடலாக வேண்டும் என்ற நோக்கத்தில், அபிட்ஸ் பகுதியில் உள்ள பிரபல அழகு நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்பெண்ணின் நீண்ட, அடர்த்தியான முடியை சரிசெய்யும் செயல்முறையின் போது எதிர்பாராத விதமாக அவரது முடி கொத்து கொத்தாக உதிர்ந்துள்ளது. முடிக்கு ஆயில் ஸ்ப்ரே செய்த போது அது கொட்டியதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இளநரை இருக்கா? கவலையை விடுங்க.. இந்த 7 உணவுகளை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க..!!

இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். மனைவியின் கோலத்தை கண்ட கணவரும் திகைத்துப் போயுள்ளார். இதனால், கணவன், மணைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இறுதியில், அழகு நிலையம்தான் முடி உதிர்வுக்கு காரணம் என தெரிந்ததும், அங்கு சென்று அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தால் விரக்தியடைந்த அந்த பெண், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அழகு நிலையத்தின் அலட்சியமே தனது முடி உதிர்வுக்கு காரணம் என அவர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!