JK terrorists attack: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வங்கி மேலாளர் சுட்டுக் கொலை..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 02, 2022, 01:05 PM IST
JK terrorists attack: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வங்கி மேலாளர் சுட்டுக் கொலை..!

சுருக்கம்

Bank Manager from rajasthan shot dead by terrorists in south kashmir kulgam: தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் பகுதியில் வங்கியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வங்கி மேலாளர் உயிரிழப்பு.  

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்கி மேலாளர் விஜய் குமார் உயிரிழந்தார். உயிரிழந்த வங்கி மேலாளர் எலாகுவாய் தெஹாதி வங்கியில் பணியாற்றி வந்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட நிலையில், தற்போது வங்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. 

“குல்காம் மாவடத்தை அடுத்த அரெ மோகனபுரா பகுதியில் உள்ள எலாகுவாய் தெஹாதி வங்கி மேலாளரை தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளினர். துப்பாக்கிச் சூட்டில் வங்கி மேலாளர் கடுமையாக தாக்கப்பட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹனுமன்கர் பகுதியில் வசித்து வந்தார். துப்பாக்கிச் சூட்டை அடுத்து அந்த பகுதி முழுக்க பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது,” என காஷ்மீர் போலீஸ் தெரிவித்து உள்ளது. 

கேள்விக்குறியான பாதுகாப்பு:

தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை அடுத்து, உள்ளூர் பகுதியில் பாதுப்பு கேள்விக்குறியாகி உள்ளது பற்றி உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஃபரூக் அகமது ஷேக் கொல்லப்பட்டார். 

இரண்டு நாட்களுக்கு முன் தான் ஜம்முவை சேர்ந்த ரஜினி பாலா என்ற ஆசிரியை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இவர் காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்தின் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 

குண்டுவெடிப்பு:

இதுதவிர இன்று காலை வாகனத்தினுள் குண்டு வெடித்ததில் மூன்று ராணுவ வீரர்கள் காயமுற்றனர்.  காயமுற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வாகனத்தில் ஏற்கனவே வெடிகுண்டு இருந்ததா அல்லது வாகனத்தின் பேட்டரி செயல் இழந்ததால் வாகனம் விபத்தில் சிக்கியதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட ஆய்வின் படி வாகனம் அதிகளவு சேதம் அடைந்து இருப்பதால், பேட்டரியில் பிழை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரியவந்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!