அடி தூள்... கொரோனாவை கட்டுபடுத்தும் சாதனம், பெங்களூரு விஞ்ஞானி சாதனை...!! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.?

By Ezhilarasan BabuFirst Published Mar 27, 2020, 2:21 PM IST
Highlights

யாராவது இந்த சாதனத்தை வீட்டில் வைத்திருந்தால் அவர்களை கொரோனா வைரஸ் தாக்காது .  இது கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு கருவி மெக்சிகோவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பபட உள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி மருத்துவ மின்னணு சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார், இது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் இந்த   சாதனத்தால் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க முடியாது ஆனால் மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார் .  இது சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளது அதனுடைய முடிவுகள் வர நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகும் அதன் பின்னர் இது மக்களின் பயன்பாட்டிற்கு வரலாம் என இவர் தெரிவித்துள்ளார் .  பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ராஜா விஜயகுமார் மருத்துவம் மின்னணு ஆராய்ச்சிப் பிரிவு அமைப்பின் தலைவராக உள்ளார்,   கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கொரோனாவை  கட்டுப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை மேலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் ஒராண்டு காலம் ஆகும் .  இந்நிலையில் இந்த  வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாட்டினர் போராடி வருகின்றனர் . 

நோயைப் பற்றி இருவரையும் முழுமையான தகவல்கள் இன்னும் விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லை ,  ஆனால் இது மிக வேகமாக பரவுகிறது என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும் .  இந்நிலையில் இந்த வைரஸை தடுக்கும் ஒரு சாதனத்தை உருவாக்க முடிவு செய்து இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதாக ராஜா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது  சோதனைக்காக  அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது ,  அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் சோதிக்கப்பட்ட பின்னர் ,  இந்த சாதனம் வீடுகள் மற்றும் பொது இடங்கள் அலுவலகங்கள் பள்ளிக்கூடங்களில் வைத்து  வைரஸ் கிருமியை கட்டுப்படுத்தலாம் என மருத்துவ மின்னணு ஆராய்ச்சிப் பிரிவு அமைப்பில் தலைவர் டாக்டர் ராஜா விஜயகுமார் தெரிவித்துள்ளார் . 

இந்த சாதனம் செயல்படும் விதம் குறித்து விளக்கிய அவர்,  வைரசால் பாதிக்கப்பட்ட நபருடன் நாம் ஒரு அறையில் இருந்தாள் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை நாம் அறிய முடியாது ,  ஆனால் இந்த சாதனம் அரிடம்  உள்ள வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் .  நோய் தொற்று பரவாமல் தடுக்கும் இந்த சாதனம் வைரசை கட்டுப்படுத்தும் சாதனமாக செயல்படும் என்ற அவர், அது செயல்படும் விதம் குறித்து விளக்கினார் ,  கொரோனா  வைரஸ் s புரதம் என்று அழைக்கப்படும் ஏராளமான முள் முனைகளைக் கொண்ட ஒரு சுழல் பந்து போன்ற அமைப்பாகும் ,  இந்த வைரஸ் மனித உடலில் படும்போது இந்த புரதங்கள் நேர்மறை செல்களாக உள்ளதால்  உடலில் உள்ள எதிர்மறை செயல்களால் ஈர்க்கின்றன.  இது உயிரணுக்களில் ஒட்டிக்கொண்டு டிஎன்ஏவை  நகலெடுக்க தொடங்குகின்றன.  இந்த வைரஸ் இப்படித்தான் உடலுக்குள் உயிர் பிழைக்கிறது .  

ஆனால் நாம் உருவாக்கியுள்ள இந்த சாதனம் அதிக அளவிலான எலக்ட்ரான்களை உமிழும்,  ஆகவே அந்த வைரசுக்கு உடலில் எலக்ட்ரான்கள் அல்லது அவற்றிற்கு வித்தியாசம் தெரியாது அப்போது எலக்ட்ரான்கள் வெளியானதும் வைரஸ் செல்கள் நடுநிலைபடுத்தப்பட்டு செயலிழக்கவைக்க முடியும்,  அப்போது எந்த ஒரு நபருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தாது ,  கட்டுப்படுத்தப்படும் வைரசால் பாதிக்கப்பட்டவர் எதையாவது தொட்டால் எலக்ட்ரான்கள் அதையும் நடுநிலையாக்கும் ,  அதன் பிறகு நீங்கள் அதை உட்கொண்டாலும் அது உங்கள் வயிற்றில் புரதமாக செல்கிறது .  அது எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது .  இந்த ஆராய்ச்சிக்கான பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது .  எனவே ஒரு  அலுவலகத்தில் ஒருவருக்கு ஜலதோஷம் தும்மல் ஏற்பட்டால் அது ஒன்றன்பின் ஒன்றாக அனைவருக்கும் பாதிக்கும் அகவே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த  சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது . 

இது கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒரு நல்ல சாதனமாக இருக்கும் ,  இது பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்தாது ஆனால் இது தொற்றுநோய் வெகுவாக குறைக்கும்  . யாராவது இந்த சாதனத்தை வீட்டில் வைத்திருந்தால் அவர்களை கொரோனா வைரஸ் தாக்காது .  இது கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு கருவி  மெக்சிகோவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பபட உள்ளது.  இதன் முடிவு வந்த பின்னர் இது பயன்பாட்டுக்கு வரும் இது அனைவருக்கும் வழங்கும் வகையில் உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம்.    உற்பத்திக்கு  இது உற்பத்தி செய்ய 600 ரூபாய் செலவாகும் ,  பெரிய அளவிலான ஒரு சாதனங்களை பெற 4 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!