OMICRON:அதிர்ச்சி தகவல்..! ஒமைக்ரான் பாதிப்புடன் தப்பி ஓடிய 10 பேர்..!

By Thanalakshmi VFirst Published Dec 4, 2021, 2:01 PM IST
Highlights

பெங்களூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில்  தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 10 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
 

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் கொரோனா, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா 4 வது அலையாக, ஆப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் தென்னப்பிரிக்காவை சேர்ந்தவர். இன்னொருவர் அம்மாநிலத்தை சேர்ந்த மருத்துவர்.

இதில் மருத்துவர் வெளிநாடு எதற்கும் சென்று வராத நிலையில், அவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நவம்பர் 12 முதல் 22 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வந்த 10 தென்னாபிப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் மயமாகியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர்களது தொலைபேசி எண்கள் சுவிட்ச் ஆப் செய்து வைக்கபட்டிருப்பதாகவும், இதனால் அவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்படுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸ் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய நிலையில் கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் விட ஒமைக்ரான் வீரிய மிக்கதாகவும் , வேகமாக பரவும் தன்மைகொண்டதாகவும் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 32 வகையில் உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் எதிர்பார்த்ததை விட வேகமாக வேகமாக பரவிவருகிறது. எனவே, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஒமைக்ரான் அதிகம் பாதித்த ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜரோப்பியநாடுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு மேற்கொள்ளபடும் கொரோனா பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால், சளி மாதிரிகள், ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பை கண்டறிய மரபியல் பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

இதனிடையே கர்நாடகாவில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 10 பேர் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுக்குறித்து, பெங்களூர் மாநகராட்சி ஆணையர், "இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் நேரடியாக எந்த தகவலும் இல்லை. அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், நிலைமையைச் சமாளிக்க நிலையான நெறிமுறைகள் உள்ளன என்பதை என்னால் கூற முடியும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

இதனையடுத்து அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழலில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர், மொபைல் ஃபோன்களை அணைத்து வைத்துவிட்டு யாரும் காணாமல் போகக் கூடாது. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுவித்துள்ளார்.

click me!