5 மாநில தேர்தல்... பேரணி நடத்த தடையை நீட்டித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

Published : Feb 06, 2022, 03:48 PM IST
5 மாநில தேர்தல்... பேரணி நடத்த தடையை நீட்டித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

சுருக்கம்

5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில், இன்று வரை பேரணிகள், பாத யாத்திரை உள்ளிட்டவை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன், இந்தியத் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பேரணிகள் நடத்த ஜனவரி 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு ஜனவரி 31 வரை தடை விதித்த நிலையில், பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டித்தது. இந்த நிலையில், 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில், சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி மைதானத்தில் 30% பார்வையாளர்களுடன் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இனி சிலிண்டர் தேவையில்லை! தண்ணீரில் எரியும் அடுப்பு: சமையல் அறையில் ஒரு புதிய புரட்சி!
Asha Bhosle passes away: 120000 ஹிட் பாடல்கள்.. பிரபல பின்னணி பாடகி ஆஷா போஷ்லே காலமானார்..!