
ஜாமர் கருவிகளை தனி நபர் அல்லது தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகள் மட்டுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜாமர்களை வாங்கி பயன்படுத்த முடியும். தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஜாமர்களை வாங்கவோ, விற்கவோ பயன்படுத்தவோ முடியாது.
இதையும் படிங்க: நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு
அதேசமயம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து யூனியன், மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களின் கீழ் தேர்வு நடத்தும் அமைப்புகளும், தகுதி வாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெற்ற பிறகும் ஜாமர்களைப் பயன்படுத்தலாம். அதே போல் உரிமம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குநர்களைத் தவிர எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தாலும் மொபைல் சிக்னல் ரிப்பீட்டர் மற்றும் பூஸ்டரை வைத்திருப்பது, விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரியில், அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அலிபாபா உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் வயர்லெஸ் ஜாமர்களை விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி திறந்து வைத்த அல்லூரி சீதாராம ராஜு சிலை..யார் இவர்..? ஓர் சிறப்பு பார்வை...
வயர்லெஸ் ஜாமர் அல்லது சிக்னல் ஜாமர், ஒரே மாதிரியான அதிர்வெண்களின் வலுவான ரேடியோ ஆற்றலைக் கதிர்வீச்சு மூலம் செல்லுலார் தகவல்தொடர்புகள், தனிப்பட்ட தகவல்தொடர்புகள், வழிசெலுத்தல் தகவல்தொடர்புகள் (GPS) போன்ற அங்கீகரிக்கப்பட்ட சிக்னல்களை ஜாம் செய்கிறது. அதாவது தடுக்கிறது. தொலைத்தொடர்புத் துறையின்படி, ஜாமர்கள் இந்திய வயர்லெஸ் டெலிகிராபி சட்டம் 1933 (IWTA 1933) இன் கீழ் வருகின்றன. இது நாட்டில் ஜாமர்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் உரிமம் தேவை என்று கூறுப்படுகிறது.