
2017 மார்ச் மாதம் 2000 ரூபாய் நோட்டுக்கு தடை செய்யப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த 2 நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ் புக்கில், 2017 ஜனவரி முதல் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அதனை யாரும் பதுக்கி வைக்க வேண்டாம். இதற்கு பதிலாக வேறு ரூபாய் நோட்டுகள் வெளிவர உள்ளன என தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
அந்த குறுஞ்செய்தியில் உள்ள வாசகங்கள் வருமாறு:-
ஐனவரி முதல் வாரத்தில் பழைய 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும் செல்லாது. ஆகவே, அதை பதுக்கிவைக்க வேண்டாம். அதேபோல், 2.5 லட்சங்களுக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு கியாஸ் மானியம் உட்பட அனைத்து அரசு சலுகைகளும் ரத்து செய்யப்படும். எனவே உங்கள் கணக்கில் மற்றவர்களின் பணத்தை மாற்றவேண்டாம்.
மாரச் முதல் புதிய 2000 ரூபாயை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று கொண்டு புதிய 1000 ரூபாய் வழங்கப்படும். புதிய 2000 ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
டிசம்பர் 31 வரை 25000 ரூபாய்க்கு குறைவாக பரிவர்த்தனை செய்த அனைத்து இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும், பிரதமர் நிதியாக வட்டியில்லா கடன் ரூ.1.5 லட்சம் வரவு வைக்கப்படும். மார்ச் மாதம் முதல் இந்தியா ஏழைகள் இல்லாத நாடாகும். கள்ளப்பணம் முற்றிலும் அழிந்து இந்தியா வல்லரசாகும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே 1000, 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதில், திடீரென சிறிய தொகை பணத்தையும் தடை செய்தால் என்ன நிலை என புரியாமல் குழம்பி கொண்டு இருக்கின்றனர்.