
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்திய கும்பலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி எஸ்.பி.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 14 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார்.
ஏழுமலையான் கோயில் மண்டபத்தில் வெங்கடேஷ் குடும்பத்தினர் தங்கி தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த வெங்கடேஷின் ஒரு வயது குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.
இதையடுத்து வெங்கடேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி யின் காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி எஸ்.பி ஜெயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடத்தப்பட்ட குழந்தையை மீட்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் கடத்தல் கும்பலை பிடித்து விடுவோம் என்றும் அவர் தெவித்தார்.