பாகுபலி போல் யானையுடன் சண்டையிட்ட வாலிபர்! தூக்கி போட்டு மிதித்ததில் ஸ்பாட்டிலேயே பலி!

 
Published : Nov 13, 2017, 09:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
பாகுபலி போல் யானையுடன் சண்டையிட்ட வாலிபர்! தூக்கி போட்டு  மிதித்ததில் ஸ்பாட்டிலேயே பலி!

சுருக்கம்

Baahubali stunt goes terribly wrong Kerala youth flung in the air after kissing elephant

பாகுபலி திரைப்படத்தில் சண்டையிடுவது போன்று முயற்சித்த இளைஞர் யானை முட்டித் தள்ளியதில் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வௌியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகா, கரிமானூரைச் சேர்ந்தவர் ஜினு ஜான். இவரும், இவரின் நண்பர் ஒருவரும்நேற்றுமுன்தினம் மது அருந்திவிட்டு, காட்டுப்பகுதி சாலையில் ஸ்கூட்டரில் சென்றனர். அப்போது, காட்டுயானை தனியாக நிற்பதை ஜினு ஜான் பார்த்துள்ளார். உடனடியாக தனது ஸ்கூட்டரை நிறுத்திய ஜான், தான் வைத்திருந்த வாழைப்பழங்களை யானைக்கு கொடுப்பதற்காக சென்றார்.

ஆனால், அவரின் நண்பரோ ‘நீ மது குடித்துள்ளாய’ ‘யானையிடம் ெநருங்காதே’ என்று எச்சரித்துள்ளார். அதையும் மீறி ஜான்யானையிடம் சென்று வாழைப் பழங்களைக் கொடுத்தார். தான் வைத்து இருந்த அனைத்து வாழைப்பழங்கள் ஒவ்வொன்றாகஜான் கொடுக்க யானையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் காட்டுயானை போல் பழகாமல் அமைதியாக வாங்கி சாப்பிட்டது.

இதைப் பார்த்த ஜானுக்கு உற்சாகம் பீறிட்டது. அதன் பின் தான் வைத்திருந்த மற்ற வாழைப்பழங்கள் அனைத்தையும் ஜான்யானைக்கு கொடுத்தார். அதன் பின் யானையின் தந்தங்களை பிடித்துக்கொண்டு முத்தமிட முயன்றார்.

அப்போது தொலைவில் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்த அவரின் நண்பர், ‘யானையிடம்ெநருங்காதே’ என எச்சரித்தார். ஆனால், அதையும் மீறி யானைக்கு ஜான் முதல் முத்தம் கொடுத்தார். அப்போது யானை அவரை ஒன்றும் செய்யவில்லை.

இதை சாதகமாக எடுத்துக்கொண்ட ஜான், பாகுபலி படத்தில் வருவது போல் யானையின் கொம்பைப் பிடித்து, தனது தலையால் முட்ட முயன்றார். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் யானை தனது தலையால் ஜானை ‘புட்பால்’ போல் தலையால் முட்டி தூக்கி வீசியது.

கண்மூடிதிறப்பதற்குள் 20 அடி தொலைவுக்கு பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி ஜான் விழுந்தார். ஜான் அருகே சென்று அவரின் நண்பர் பார்த்தபோது  சுயநினைவை இன்றி முதுகு எலும்பு உடைந்து கிடந்தார். இதையடுத்து, ஜானின் நண்பர்,ஆம்புலன்சுக்கு போன் செய்து,வரவழைத்து ஜானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், ஜான் பரிதாபமாக உயிரிழந்தார்.

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!