Thousand Trains For Ayodhya : ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்திக்கு 1,000 ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
அயோதியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் இந்திய ரயில்வே வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 ரயில்களை அயோத்திக்கு இயக்க உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் பக்தர்கள் சிரமமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வந்து வழிபட்டு செல்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் ஜனவரி 22ஆம் தேதி அங்கு ஸ்ரீ ராமர் அவர்களுடைய சிலை வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களின்படி இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், பூனே, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்திக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
undefined
அயோத்தியில் புதிய மசூதி: அடிக்கல் நாட்டும் மெக்கா இமாம்!
மேலும் தேவையை பொருத்து இந்த ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மக்கள் கூட்டத்தை கையாளும் அளவிற்கு அயோத்தியா ரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 50,000 பேர் வரை வந்து செல்லும் அளவிற்கு புதுப்பிக்கப்படும் அந்த ரயில் நிலையம் ஜனவரி 15ஆம் தேதி முழு செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அயோத்திக்கு வந்து ஸ்ரீ ராமரை தரிசித்து செல்ல வரும் யாத்திரைகளுக்கு என்று சிறப்பு ரயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பெருந்திரளாக வரும் பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவுகளை வணங்கு வழங்கவும் ஐஆர்சிடிசி தற்பொழுது ஆவணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ராமர் கோவிலை பார்க்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் கட்டுமரத்தில் புனித சர்யு நதியில் ஒரு அழகிய பயணம் கூட்டிச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமரத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை பயணிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.