யார் இந்த மவுன பாபா? அயோத்தி ராமர் கோவிலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மவுன பாபா தனது 10 வயதில் ராமர் கோவில் கட்ட வேண்டி மவுன விரதம் அனுஷ்டி வந்தவர் ஜனவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கும் ராமர் சிலை பிரதிஷ்டையின்போது ''ராம்'' என்ற வார்த்தையை உச்சரித்து விரதத்தை முறிக்கிறார்.


மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் மவுனி பாபா. இவர் தனது 10 வயதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 44 ஆண்டுகளாக செருப்பு அணியாமல், மவுன விரதம் மேற்கொண்டு வந்தார். வரும் ஜனவரி 22ஆம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்தவுடன் தனது மவுன விரத்தை ''ராம்'' என்ற சொல்லை உச்சரித்து கைவிடுகிறார். அதேபோல், செருப்பு அணிய மாட்டேன் என்று எடுத்து இருந்த சபதத்தையும் கைவிடுகிறார்.  

மவுன பாபா என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் மோகன் கோபால் தாஸ். இவரை தற்போது அனைவரும் மவுன பாபா என்றே அழைக்கின்றனர். பாபர் மசூதி இடிப்பின்போது, கரசேவர்களுடன் மவுன பாபாவும் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி தனக்கு ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை அனுப்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறார். தினமும் தனக்கு அழைப்பிதழ் வந்து இருக்கும் என்ற நம்பிக்கையில், போலீஸ் எஸ்பி மற்றும் கலெக்டர் அலுவகத்திற்கு சென்று விசாரித்து வருகிறார். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கு சிலேட்டில் எழுதி பதில் அளிக்கிறார்.

Latest Videos

இவரது சொந்த ஊர் சூர்யா நகர் புலாவ் பாலாஜி ஆகும். ஆனால், இவர் தற்போது மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் தாதியாவில் வசித்து வருகிறார்.  

“பிரதமர் மோடி ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்..” 1990 ரத யாத்திரையை நினைவு கூர்ந்த எல்.கே. அத்வானி

மவுன மாதா:
இவர் மட்டுமின்றி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மவுன மாதா என்று அழைக்கப்படும் சரஸ்வதி தேவி, கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி மவுன விரதம் அனுஷ்டித்து வருகிறார். இந்த விரத சபதத்தை பாபர் மசூதி இடிப்பின்போது எடுத்து இருப்பதாக கூறுகிறார். ராம ஜென்ம பூமி நியாஸ் மற்றும் ராமர் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ராவின் தலைவராக இருக்கும் நிருத்ய கோபால் தாஸின் சீடர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு மவுன மாதாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர்.
இணையத்தில் அயோத்தி:

அயோத்தி ராமர் கோவில் இந்தியாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. டிராவல் புக்கிங் இணையதளங்களில் அயோத்தி பற்றி அதிகம் பேர் தேடுதலில் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பேர் அயோத்தி ராமர் கோவில் குறித்த செய்திகளை தேடி வருகின்றனர். ராமர் கோவில் திறப்பு விழா அறிவிப்பு வெளியானதில் இருந்து இன்று வரை இதுதொடர்பான செய்திகளை தேடுபவர்களின் சதவீதம் இணையத்தில் 1,806 சதவீதம் அதிகரித்துள்ளது.  

அயோத்தி ராமர் கோவில் பின்னணியில் என்ன நடந்தது? 1528 - 2023 வரை நடந்த வரலாற்று நிகழ்வுகள் ஒரு பார்வை!!

சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி:
இன்னும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஒன்பது நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தினமும் சிறப்பு பூஜையில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவித்து இருந்தார். நேற்றே அவர் தனது சிறப்பு பூஜையை துவக்கினார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த வீடியோவில், "நம் சாஸ்திரங்களில் கூரியுள்ளதுபடி, யாகம் மற்றும் கடவுள் வழிபாட்டிற்கு நமக்குள்  தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, கும்பாபிஷேகத்திற்கு முன் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிகளும், விரதங்களும் வேதத்தில் கூறப்பட்டுள்ளன. எனவே, சில புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் ஆன்மீக பயணத்தில் பெரிய மனிதர்களிடமிருந்து நான் பெற்ற வழிகாட்டுதலின் படி இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு சடங்குகளைத் தொடங்குகிறேன்," என்று தெரிவித்து இருந்தார்.

click me!