அயோத்தியில் இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இன்று மாலை தனது இல்லத்தில் ராம் ஜோதி ஏற்றி வழிபட்டார்.

07:26 PM (IST) Jan 22
07:17 PM (IST) Jan 22
05:52 PM (IST) Jan 22
நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 10.13 சதவீதம் அதிகரித்துள்ளது
05:05 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, சரியாக 12.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது
03:12 PM (IST) Jan 22
குழந்தை ராமர் இனி கூடாரத்தில் தங்க மாட்டார்; பெரிய கோவிலில் தங்குவார் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
02:43 PM (IST) Jan 22
நாம் திரேதா யுகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
02:10 PM (IST) Jan 22
தளபதி விஜய் தன்னுடைய மகன் மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து இதுவரை யாரும் கூறாத தகவலை கூறியுள்ளார். மேலும் படிக்க:
02:08 PM (IST) Jan 22
நடிகை சமந்தா, சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும்... விடாமுயற்சியோடு பட வாய்ப்புகளை தேடி, பல்வேறு கஷ்டத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் பார்க்க:
02:06 PM (IST) Jan 22
குழந்தை ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பிரதமர் மோடி வணங்கினார்.
01:48 PM (IST) Jan 22
அயோத்தியில் நடைபெற்ற ராம் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி.
01:24 PM (IST) Jan 22
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் உள்ள ராம் லல்லா சிலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
01:17 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
01:13 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தன் மனைவி ஐஸ்வர்யா ராய் இன்றி நடிகர் அபிஷேக் பச்சன் சிங்கிளாக வந்திருந்தார்.
01:11 PM (IST) Jan 22
அயோத்தியில் ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது. ஸ்ரீராமபிரான் சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
01:06 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு ராம பிரானின் புகைப்படங்கள் தற்போது பிரத்யேகமாக வெளியாகி உள்ளது.
12:54 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
12:45 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி ராமர் கோவிலில் மலர்கள் தூவப்பட்டது.
12:35 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை பூஜைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்
12:07 PM (IST) Jan 22
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு ஒரு பிரச்சனையும் வராத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:06 PM (IST) Jan 22
ஆரத்தியின் போது, கோவில் வளாகத்தில் 30 கலைஞர்கள் வெவ்வேறு இந்திய இசைக்கருவிகளை வாசிப்பார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து இசைப்பார்கள். இவை அனைத்தும் இந்திய இசைக் கருவிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:04 PM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா : ஆரத்தியின் போது ராணுவ ஹெலிகாப்டர்கள் அயோத்தியில் மலர் மழை பொழியும்.
12:02 PM (IST) Jan 22
ஆரத்தி நேரத்தில், விருந்தினர்கள் அனைவரின் கைகளிலும் மணி இருக்கும். ஆரத்தியின் போது அனைத்து விருந்தினர்களாலும் இசைக்கப்படும்.
11:58 AM (IST) Jan 22
லக்னோ, அயோத்தி விமான நிலையத்தில் நடிகர் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
11:51 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், அவரது மனைவியும் நடிகையுமான அலியா பட், கத்ரீனா கைப், அவரது கணவர் விக்கி கௌஷல் மற்றும் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
11:37 AM (IST) Jan 22
ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்துள்ளார் அகிலேஷ் யாதவ். அதற்குப் பதிலாக லக்னோவில் உள்ள பூங்காவில் உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
11:35 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான உண்மையான 'முஹூர்த்தம் அல்லது மங்களகரமான நேரம் 84 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
11:33 AM (IST) Jan 22
அயோத்தி: ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுமான அபிஷேக் பச்சன் கலந்து கொண்டனர்.
11:23 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
11:11 AM (IST) Jan 22
NRSC ஆல் பகிரப்பட்ட படங்களில், 2.7 ஏக்கர் ராமர் கோயில் கட்டுமானத்தில் உள்ள இடத்தைக் காணலாம். இஸ்ரோ செயற்கைக்கோள்கள் இதனை படம்பிடித்துள்ளது.
11:09 AM (IST) Jan 22
அயோத்தி : ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.
11:01 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமின்றி சினிமா பிரபலங்களும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளதால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
09:49 AM (IST) Jan 22
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் இன்று நாடாகும் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரலையில் காண பின்வரும் இணைப்பில் இணையவும்.
09:34 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்க 200 டன்னுக்கும் அதிகமான மலர்கள், 150 டன்னுக்கும் அதிகமான அசோக மரஇலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதற்காக பீகாரில் இருந்து ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மலரிலும் ராமர் உருவம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
09:28 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு தனி விமானத்தில் கிளம்பி சென்றார் நடிகர் சிரஞ்சீவி. வீடியோ காண : https://twitter.com/AsianetNewsTM/status/1749279519532372106?s=20
09:26 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு தனி விமானத்தில் கிளம்பி சென்றார் நடிகர் சிரஞ்சீவி
09:22 AM (IST) Jan 22
இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வீடியோவைக் காண : https://twitter.com/AsianetNewsTM/status/1749273663059444093
09:21 AM (IST) Jan 22
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
09:19 AM (IST) Jan 22
பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு இன்று காலை 10.30 மணிக்கு வருகிறார். கிட்டத்தட்ட 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர். கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும். 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் என்று விழா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
09:17 AM (IST) Jan 22
கடந்த 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
09:13 AM (IST) Jan 22
இன்று திறக்கப்பட உள்ள அயோத்தி ராமர் கோவிலின் பிரத்யேக காட்சிகள்.