அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சீதைக்கு 196 அடி பிரம்மாண்டமான சேலை!

By Manikanda PrabuFirst Published Jan 12, 2024, 2:28 PM IST
Highlights

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலுக்கு பரிசளிப்பதற்காக 196 அடி கொண்ட பிரம்மாண்டமான சேலையை நெசவாளர் ஒருவர் தயாரித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இதனிடையே, கும்பாபிஷேக விழாவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ராமர் கோவில் மாதிரி வைர நெக்லஸ் செய்து பரிசாக கொடுக்க உள்ளார். குஜராத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளம் கொண்ட பெரிய ஊதுபத்தியை பரிசாக கொடுக்க உள்ளார். இதுபோல ஏராளமான பரிசுகள் ராம்ருக்கும், சீதைக்கும் தயார் செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில், ஆந்திராவை சேர்ந்த நெசவாளர் நாகராஜு, சீதைக்காக 196 அடி புடவையை நெய்துள்ளார். அந்த சேலையில், 13 மொழிகளில் 32,200 முறை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வார்த்தை எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்த அழகான புடவையை பரிசளிக்க நாகராஜு திட்டமிட்டுள்ளார்.

ராமாயணத்தில் வரும் பல காட்சிகள் இந்த சேலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவமான சேலை "ராம கோடி வஸ்த்ரா" என்ற சிறப்பு துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, மலையாளம். ஒடியா போன்ற மொழிகளில் ஸ்லோகங்கள் புடவையில் நெய்யப்பட்ட்டுள்ளன. ராமாயணத்தில் ராமரின் வாழ்க்கைக் கதையிலிருந்து 168 படங்களும் இந்த சேலையில் இடம்பெற்றுள்ளன.

அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!

16 கிலோ எடையுள்ள இந்த சேலை சாதாரண சேலையை விட கிட்டத்தட்ட 11 மடங்கு கனமானது. தினமும் சுமார் 10 மணி நேரம் என ஆறு மாதங்கள் உழைத்து இந்தப் புடவையை நாகராஜு உருவாக்கியுள்ளார். கும்பாபிஷேக விழாவில் இந்த சேலையை வழங்க அனுமதிக்காக தற்போது காத்திருக்கும் நாகராஜு, ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த சிறப்பு சேலையை வழங்குவதற்காக அயோத்திக்குச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால் மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த சேலையை ராமர் கோயிலுக்கு பரிசளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். நாகராஜு சமீபத்தில் புடவையை உள்ளூரில் காட்சிப்படுத்தினார். இதைப் பார்க்க சுமார் 500 பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!