பேக்கிங் செய்த ரூ.6 லட்சம் கோடி பொருட்களுக்கு மீண்டும் புதிய விலை... ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி

 
Published : Nov 13, 2017, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
பேக்கிங் செய்த ரூ.6 லட்சம் கோடி பொருட்களுக்கு மீண்டும் புதிய விலை...  ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி

சுருக்கம்

August surplus clinched GST rate cut talks on for shift to tworate regime

200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதையடுத்து, ஏற்கனவே பேக்கிங் ெசய்து இருப்பு வைக்கப்பட்ட ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு மீண்டும் புதிய விலை ஒட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை 1ந்தேதி அமலுக்கு வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு முன்பு இருந்ததைக்காட்டிலும் அதிகமாக வரி விதிக்கப்பட்டு இருந்தது கண்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த வாரம் கூடி 200க்கும் மேற்பட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த வரியைக் குறைத்தது. ஓட்டல்களுக்கு 5 சதவீதமாக வரியை குறைத்தது. 

இதில் 28 சதவீதத்தில் இருந்த 178 பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.  சில பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது, பல பொருட்கள் வரியும் குறைக்கப்பட்டது. ஆடம்பர  பொருட்கள், புகையிலை, பீடி, சிகரெட் போன்றவற்றுக்கு மட்டுமே 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு , மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் இருப்பில் உள்ள பேக்கிங் செய்த உணவுப்பொருட்களிலும், சந்தையில் உள்ள பொருட்களிலும் விலையை மாற்றி அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு கடிதம் எழுதி இருந்தனர். 

இது குறித்து அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கந்தல்வால் கூறியதாவது-

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் சந்தையில் இருக்கிறது.  ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பேக்கிங் செய்த பொருட்களில் எம்.ஆர்.பி. விலை ஒட்டப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட நிலையில், பொருட்களின் பேக்கிங் மீது ஒட்டப்பட்ட விலையை மாற்றி அமைக்காமல் சந்தையில் விற்பனைக்கு அனுப்பினால், அதனை விற்க அனுமதித்தால் சந்தையில் பாதமான விளைவுகளை உண்டாக்கும். பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாக இருப்பதால், அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது.

பொருட்களின் மீது புதிய விலையை  ஒட்டுவதற்கு மத்திய உணவு அமைச்சகம் அனுமதித்தால்தான், எதிர்காலத்தில் எந்த வர்த்தகர் மீதும், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்க முடியும்.

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதற்காக மத்திய அரசு உருவாக்கிய ஜி.எஸ்.டி. போர்ட்டல் சரியாக செயல்படாததால், வர்த்தகர்களுக்கு மனதளவில் பெரும் உளச்சலையும், தொந்தரவுகளையும் அளித்தது. ஜி.எஸ்.டி. வரியை முறையாக செயல்படுத்த முடியாமல் போனதற்கு ஜி.எஸ்.டி. போர்ட்டல் முறையாக செயல்படாதது ஒரு முக்கிய காரணம் ’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மாப்ள.. நான் வந்துட்டேன்! 12,800 கி.மீ. தாண்டி வந்து நண்பனை மிரள விட்ட NRI இளைஞர்!
வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!