சுயசார்பு இந்தியா திட்டம்: இன்று விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அறிவிப்புகள்

By karthikeyan VFirst Published May 14, 2020, 4:20 PM IST
Highlights

சுயசார்பு பாரதம் திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்பில் இன்று சிறிய விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படவுள்ளன.

சுயசார்பு பாரதம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளில், 15 அறிவிப்புகளை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள், மின்னுற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். 

சுயசார்பு பாரதம் திட்ட அறிவிப்புகள் 5 நாட்களுக்கு தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துவிட்டுத்தான், நேற்று 15 அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இந்நிலையில், இரண்டாம் கட்ட அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார். இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டுவரும் நிர்மலா சீதாராமன், இன்று மொத்தம் 9 அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், சிறிய விவசாயிகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 அறிவிப்புகள், சிறு வணிகர்கள், வீட்டுவசதி மற்றும் பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகிய மூன்று தரப்புக்கும் தலா ஒரு அறிவிப்பு மற்றும் சிறிய விவசாயிகளுக்கான 2 அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாக என தெரிவித்தார்.
 

click me!