
இந்தியா 75-வது சுதந்திரத்தினத்தைக் கொண்டாடிவரும் நிலையில், உத்தரப்பிரதேசம் லக்னோ பல்கலைக்கழகத்தில் இளநிலை பி.ஏ. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோர்வி அடைந்துள்ளனர்.
ராஷ்ட்ர கவுரவ் மற்றும் சுற்றுச்சூழல் பாடத்திலும் பொது அறிவுத் தேர்விலும் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தேசத்தின் வரலாறு, புவிவியல், நடப்புச் செய்திகள், சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து கேட்கப்பட்ட பொதுஅறிவில் மாணவர்கள் மோசமாக தேர்வு எழுதியுள்ளனர்.
அனில் அம்பானிக்கு நவம்.17 வரை கெடு! வருமானவரி துறை நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை
13,392 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 440 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 1,041 மாணவர்கள் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் இருந்து வந்து தேர்வு எழுதினர். இவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துகூட தேர்ச்சி அடையவில்லை.
2005ம் ஆண்டிலிருந்து ராஷ்ட்ரிய கவுரவ் மற்றும் சுற்றுச்சூழல் படிப்புகளில் தேர்வு எழுதினால்தான் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததாகக் கருதப்படும். இந்த தேர்வில் பொதுஅறிவு, விழிப்புணர்வு, வரலாறு, புவியியல், சுற்றுச்சூழல் கல்வி, பொது அறிவியல் ஆகிய வினாக்கள் கேட்கப்படும். ஆனால், அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்விஅடைந்தனர்.
மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்
லக்னோ பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் அலோக் குமார் கூறுகையில் “ இது நான்-கிரெடிட் கோர்ஸ்தான். இருப்பினும், மாணவர்கள்இதிலும் தேர்ச்சி பெறுவது அவசியம். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலிலும் இந்த மதிப்பெண் சேர்க்கப்படாது.
அதனால் யாரும் மாணவர்கள் இந்த தேர்வில் அதிகமாக மெனக்கெட்டு படிப்பதில்லை. ஆனால், இளநிலை பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெறுவதற்கு இருதேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பாடத்தில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி! காரணம் என்ன? சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு
இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத, மதிப்பெண் பட்டியலில் சேராத பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. நாளேடுகள் படிக்காமல் இருத்தல், பொது அறிவுத்திறன் குறைவாக இருத்தல் ஆகியவை மாணவர்கள் இந்தத் தேர்வில் அதிகம் தோல்வி அடையக் காரணமாகும்” எனத் தெரிவித்தார்